திருகோணமலை பொது வைத்தியசாலையில் துர் நாற்றம் - நோயாளர்கள் விஷனம்

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை பொது வைத்தியசாலையில் நோயாளர்களின் விடுதிகள் மற்றும் மலசல கூடங்கள் அசுத்தமாக காணப்படுவதினால் துர்நாற்றம் வீசுவதாக நோயாளர்கள் விஷனம் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு பல பிரதேசங்களிலிருந்தும் சிகிச்சைக்காக நோயாளர்கள் வருகை தருவதாகவும்,வைத்தியசாலை விடுதிகள்,சுற்று புர சூழல்கள் அசுத்தமாக காணப்படுவதினால் துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

வைத்தியசாலையை சுத்தப்படுத்துவதற்காக ஒரு நாளைக்கு 60ற்கும் மேற்பட்ட சுத்திகரிப்பு தொழிலாளிகள் தேவைப்படுகின்ற போதிலும் 35 பேர் மாத்திரமே கடமையாற்றி வருவதாகவும் தெரியவருகின்றது.

திருகோணமலை பொது வைத்தியசாலை மத்திய அரசாங்க கண்காணிப்பில் காணப்பட்டும் ஏன் அதிகாரிகள் துர்நாற்றம் வீசும் வரை செயற்படுகின்றார்கள் எனவும் நோயாளர்களும்,புத்திஜீவிகளும் கவலை தெரிவிக்கின்றனர்.

தற்போது சுத்திகரிப்பு சேவையில் அரசியல் வாதியொருவரின் கம்பனியொன்று ஒப்பந்த அடிப்படையில் செயற்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.

திருகோணமலை மாவட்ட நோயாளர்களின் நலன் குறித்து சுத்திகரிப்பாளர்களை அதிகரித்து துர்நாற்றமில்லாத வைத்தியசாலையாக மாற்ற வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -