தமிழக மீனவர்கள், இலங்கை கடல் எல்லைக்குள் வந்துவிடாமல் தடுப்பதற்காக, நடுக்கடலில் இலங்கை எல்லைப் பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் கைது செய்யப்படுவதும் அவர்களுடைய படகுகள், கடற்படையினரால் பறிமுதல் செய்யப்படுவதும் என்று இருக்கும் தற்போதைய நிலையிலேயே, இந்த எல்லைப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை- இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கான தீர்வை, இரு நாட்டு அரசாங்கங்களும் இன்னும் பெற்றுக்கொடுக்கவில்லை. இதற்கான பேச்சுர்த்தை நடத்தப்பட்டு வந்த போதிலும், அதற்கான இறுதியான முடிவும் இன்னும் எட்டப்படவில்லை. எனினும், தங்களுக்கான கடல் எல்லை என்ன என்பது தெரியாமல்தான், இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுகின்றார்கள் என்று, தமிழக மீனவர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் வந்துவிடாமல் தடுப்பதற்காக, நடுக்கடலில், எல்லைப் பலகை ஒன்றை, கடற்படையினர் வைத்துள்ளனர். இலங்கையிலிருந்து 5ஆவது மணல் திட்டில், இலங்கை தேசியக் கொடியுடன், இந்தப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே தனுஷ்கோடியிலிருந்து 5ஆவது மணல் திட்டில், இந்தியாவும் எல்லைப் பெயர் பலகை வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. TM