மஹிந்தவால் மரணமானோர்களின் அறிக்கை வெளியானது



முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் லட்சக் கணக்கான மக்கள் கலந்து கொண்டு, ஊர்வலத்தில் பங்கு பெற்றுள்ளனர். நேற்றைய தினம் நடந்த இந்தக் கூட்டத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர் என்று செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் குறித்த இருவரின் இறுதிச் சடங்கிலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளார்.இதேவேளை, மரணமடைந்தவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள மருத்துவ அறிக்கையில், கூட்டத்தில் கலந்து கொண்ட இவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு சரியான காற்று மற்றும், சுவாசப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மாரடைப்பு ஏற்பட்டதாக தெரியவருகிறது.தவிர, நேற்றைய கூட்டத்தின் போது வெப்பம் மற்றும் களைப்புக் காரணமாக ஐந்து பேர் தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

எனினும் இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட முன்னரே உயிரிழந்தனர் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -