அப்துல்சலாம் யாசீம்-
முற்சக்கர வண்டியில் சட்ட விரோத முறையில் 09கிலோ மரை இறைச்சியை கொண்டு சென்ற வயோதிபருக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டம் செலுத்துமாறு திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா இன்று (03) உத்தரவிட்டார்.
இவ்வாறு தண்டம் விதிக்கப்பட்டவர் பாலையூற்று-பூம்புகார் வீதியைச்சேர்ந்த இருதயநாதன் கெலிஸ்டன் (45வயது) எனவும் தெரியவருகின்றது.
திருகோணமலை 05ம்கட்டை பகுதியிலிருந்து கன்னியா நோக்கி EP.ABF-6623 எனும் இலக்க முற்சக்கர வண்டியில் மரை இறைச்சி கொண்டு செல்வதாக உப்புவெளி பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து சோதனையிட்ட போது முற்சக்கர வண்டியில் 09கிலோ மரை இறைச்சி கைப்பற்றப்பட்டதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.