கிராமிய அபிவிருத்தி திட்டங்களில் எனது பங்களிப்பு நிச்சயமாக கிடைக்கும் - தௌபீக் எம்.பி

கிண்ணியாவில் மாத்திரமல்ல திருகோணமலை மாவட்டத்திலும் பல பின்தங்கிய கிராமங்கள் காணப்படுகின்றன அந்த வகையில் சமாச்சந்தீவு கிராமமும் ஒன்றாகும் இந்த கிராமத்தின் உங்களால் முன்வைக்கப்பட்ட திட்டங்களை விரைவாக செய்து முடிப்பதற்கு எனது பங்களிப்பும் நிச்சயமாக காணப்படும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் இன்று (11) மாலை சமாமாச்சந்தீவு இளைஞர்களுடனான றமீஸ் ஆசிரியரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சந்திப்பில் தெரிவித்தார்.

காலம் காலமாக கிண்ணியா மண் பாராளுமன்ற உறுப்பினர்களைக்கண்டு வருகிறது கிண்ணியாவுக்கான மத்திய பிரதேசமான புஹாரியடி சந்தி கூட முன்னேற்றமடையாமலும் சுருங்கி காணப்படுகிறது.

50 வருடங்களுக்கு முன்னர் இருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் கூடுதலாக செய்திருந்தால் இந்த கிராமமான சம்மாச்சந்தீவு போன்ற மைதானம் உட்பட பல அபிவிருத்தி திட்டங்களை இலகுவாக செய்திருக்கலாம். இருந்தாலும் கூட உங்களால் முன்வைக்கப்பட்ட பல பிரச்சினைகளை விரைவாக செய்து தருவேன் என்றும் பாடசாலைகளுக்கான கல்வித்திட்டங்களை மேம்படுத்தவும் இயன்றளவான உதவிகளை செய்து தருவேன் என்றும் கூறினார். 

இதில் சம்மாச்சந்தீவு இளைஞர்கள் விசேடமாக மைதானத்தை செய்து தருமாறும் கோரிக்கையினை பாராளுமன்ற உறுப்பினரிடம் முன்வைத்தனர் மேலும் அஸ்சபா பாடசாலை அதிபரும் பங்கேற்றதோடுகுறைபாடுகளையும் முன்வைத்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -