பி.எம்.எம்.ஏ.காதர்-
மருதமுனையைச் சேர்ந்த இளம் ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சினாஸ் ஊடகத் துறைக்கு ஆற்றிவரும் சேவையை கௌரவித்து மருதமுனை ஹியுமன் லின்க் விஷேட தேவையுடையோருக்கான வளப்படுதல் நிலையத்தினால் விருது வழங்கி கெரவிக்கப்பட்டார்.
மருதமுனை ஹியுமன் லின்க் விஷேட தேவையுடையோருக்கான வளப்படுதல் நிலையத்தின் 10 வருட நிறைவு நினைவுப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை (30-04-2017) மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் ஹியுமன் லின்க் பணிப்பாளர் ஏ.எல்.கமறுத்தீன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக் கலந்து கொண்ட கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.சி.அன்சார்,அதிதியாக் கலந்து கொண்ட கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீரின் பிரத்தியேகச் செயலாளர் யூ.எம்.வாஹித் ஆகியோர் இவருக்கான விருதை வழங்கி கௌரவித்தனர்.
இந்த நிகழ்வில் கௌரவ அதிதிகளாக கல்முனை வலயக கல்விப் பணிப்பாணர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், ஹியுமன் லின்ங் ஸ்தாபகரும். தலைவருமான கே.எம்.றொஷான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஏ.எல்.எம்.சினாஸ் 2003ஆம் ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பகுதிநேர அறிவிப்பாளராக இணைந்து 14 ஆண்டுகள் ஒலிபரப்புத் துறையில் சமூகம் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளை வெளிக் கொண்டு வந்துள்ளார். தற்பொழுது பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி சேவையிலும் பிராந்திய செய்தியாளராகக் கடமையாற்றி வருகின்றார்.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் சிறப்புக் கலைமானி பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ள இவர் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவரும், மருதமுனையைச் சேர்ந்த ஆதம்லெப்பை. சுபைதா தம்பதியின் புதல்வராவார்.