மட்டு கல்வி வலய பாடசாலைகளுக்கு நிழற் பிரதியெடுக்கும் இயந்திரங்கள் கையளிப்பு..!

ட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளுக்கு நிழற் பிரதியெடுக்கும் இயந்திரங்கள் (PHOTO COPY MECHINE) கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினால் வழங்கி வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மத்திய கல்வி வலய பணிப்பாளரின் தலைமையில் ஏறாவூர் அல் ஜிப்ரியா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம் டீ ஏ நிசாம் மற்றும் மட்டக்களப்பு மத்திய கல்வி வலய அதிபர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்,

இதன் போது ஓட்டமாவடி ஷரீப் அலி வித்தியாலயம்,ஓட்டமாவடி மில்லத் வித்தியாலயம் ,ஏறாவூர் பஷீர் சேகுதாவூத் வித்தியாலயம்,ஏறாவூர் அரபா வித்தியாலயலம்,காத்தான்குடி அன்வர் வித்தியாலயம் மற்றும் காத்தான்குடி அல் இக்பால் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கே நிழற் பிரதியெடுக்கும் இயந்திரங்கள் கிழக்கு முதலமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டன.

இதேவேளை மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளின் குறைபாடுகள் மற்றும் மாணவர்களின் கல்வி நிலை போன்றவை தொடர்பிலும் இதன் போது அதிபர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டன,

கல்விநிலையில் பின் தங்கிய பாடசாலைகளை முன்னேற்றுவதற்கான நடவடிக்ைககள் தொடர்பிலும் இதன் போது கிழக்கு முதலமைச்சரின் தலைமையில் விரிவாக ஆராயப்பட்டன.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -