பாராட்டு என்பது போதையாக மாறாமல் ஊக்கிவிப்பதாக அமையவேண்டும்..!

பைஷல் இஸ்மாயில் -
பாராட்டு என்பது ஒரு போதையாக மாற்றாமல், மாணவர்களின் கல்வி செயற்பாடுகளையும், கல்வி சார்ந்த விடயங்களையும் ஊக்குவிப்பாக இது அமையவேண்டுமே தவிற, இது ஒரு கடமையாகவே, சடங்காகவே எடுத்துக்கொள்ளக் கூடாது என்று நிந்தவூர் கோட்டக் கல்வி அதிகாரி வி.ஜிஹானா அலிப் தெரிவித்தார்.

இம்முறை க.பொ.தர சாதாரண தரத்தில் அதி கூடிய பெறுபேறுகளை பெற்ற நிந்தவூர் கோட்டத்தில் சாதனை நிலை நாட்டிய 31 மாணவர்களை பாராட்டி கௌரவித்து சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்றிரவு (30) நிந்தவூர் அல் -மஸ்கர் பெண்கள் உயர் பாடசாலையின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய காலகட்டத்தில் எங்களை நாங்கள் தக்கவைத்துக் கொள்வதற்கான ஊடகம் கல்வியன்று வேறு ஏதும் இதற்கு மிகை இல்லை இந்த உயர் அடைவுகளைப் பெற்ற இம்மாணவர்கள் அனைவரும் தங்கள் வாழ்வின் உயர்ந்த இடங்களை கல்வியின் ஊடாக பெறவேண்டும். அதன் மூலம் அவர்களை பின் தொடர்ந்து வரும் மாணவர்களின் கல்விக்கு தங்களால் முடிந்தளவு அனைத்துப் பங்களிப்பினையும் செய்யவேண்டும். 

இந்த அடைவுகளை அடைவதற்கான முயற்சிகளில் கல்வியின் பங்குதாரர்கள் அனைவரும் சுழன்று கொண்டு இரிக்கின்றார்கள். இந்த சுழற்சி முறையான இம்முயற்சியில் வெற்றிபெருவது ஒரு சமானிய விடயம் அல்ல. அதில் நாங்கள் வெற்றியின் முதல் அடியை தொட்டு உள்ளோம்.

கல்முனை கல்வி வலயத்தில் இம்முறைதான் நிந்தவூர் கோட்டம் முன்னனியில் உள்ளது. இது பாராட்டப்பட வேண்டிய விடயமாகும். இதன் முதற்கட்டமாகவும் முதல் முயற்சியாகவும் சிறந்த பெறுபெறுகளைப் பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்ச்சியாக இதை ஒழுங்கு படுத்தியுள்ளோம்.

அதுமாத்திரமல்லாமல் ஒவ்வொரு ஆசிரியரும் இதில் பாராட்டப்பட வேண்டியவர்கள். மேலும் இம்மண்ணின் மகனான மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாம் சேர் உள்ளிட்ட ஒவ்வொரு பாடசாலையின் அதிபர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்தான் என்று நிந்தவூர் கோட்டக் கல்வி அதிகாரி வி.ஜிஹானா அலிப் மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -