திருகோணமலை சம்பூரில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை-படங்கள்


ஏ.எம்.கீத் கீத் திருகோணமலை-

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட சேனையூர் களப்பு பிரதேசத்தில் நேற்று (03-04-2017) மாலை கசிப்பு உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றை சம்பூர் பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சம்பூர் பொலிஸ் நிலய பொருப்பதிகாரி புத்திக ராஜபக்ச அவர்களின் தலைமையின் கீழ் சென்ற பொலிஸாரினால் அந்நிலையத்தை கையகப்படுத்தியதுடன்

402 லீற்றர் கோடா மற்றும் 2 பெரல் உற்பட்ட பொருட்களை கைப்பற்றியதுடன் கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்ட சேனையூர் 6 வட்டாரத்தைச்சேர்ந்த டி.மதன்மோகன் வயது(22) என்பவறை கைதுசெய்தனர்.கைப்பற்றப்பட்ட பொருட்களையும் கைது செய்யப்பட்டவரையும் இன்று (04-04-2017) மூதூர் மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் சம்பூர் பொலிஸர் ஈடுபடுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -