வடக்கில் பாதுகாப்புப் படையினா் வசம் உள்ள சகல காணிகளையும் மீள பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்காக இன்று(17) எதிா்கட்சித் தலைவா் இராசம்பந்தன் தலைமையில் பாதுகாப்பு அதிகாரிகள் செயலளாா் சந்திப்பு நடைபெற்றது.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மே மாதம் தினங்கள் வழங்கப்பட்டு அப்பிரதேச மக்களை பாதுகாப்பு படையினா் சந்தித்து விடுவிக்க வேண்டிய காணிகளை விடுவிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனா். யாழ்ப்பாணத்தில் இன்னும் 6000 ஏக்கா் நிலம் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது. என இரா சம்பந்தன் இன்று எதிா்க்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளா் மாநாட்டில் இன்று(17) இவ்விடயங்களை தெரிவித்தாா்.