சப்னி அஹமட்-
அம்பாறை மாவட்டம், அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கான ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று (18) அட்டாளைச்சேனை பிரதேச உதவிச் செயலாளர் அதிசயராஜ் தலைமையில் இடம்பெற்றது. அட்டாளைச்சேனை , பாலமுனை, ஒலுவில், தீகாவாபி போன்ற பிரதேசங்களின் அபிவிருத்திகள் தொடர்பான முக்கிய விடயங்கள் இங்கு முன்வைக்கப்பட்டது ஆராய்ப்பட்டது.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீரினால் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உள்ள மிக நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வுகோரிக்கை ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் பிரேரணைகள் முன்வைகப்பட்டது.
முன்வைக்கப்பட்ட தீர்மானங்களாவன;
அட்டாளைச்சேனை பிரதேசத்தின் எதிர்கால அபிவிருத்தி கருதி டாக்டர் ஜலால்தீன் வீதியில் குடாக்கரை கிழல் கண்டத்தில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள சதுப்பு நில காணியில் 20 ஏக்கரை சுவிகரித்து அப்பிரதேசத்தின் மிக முக்கிய வளங்களை ஏற்படுத்துவதற்கான பிரேரணை ஒன்றினை அமைச்சர் கொண்டுவந்தார். குறித்த காணியை பெற்றுவதற்கான குழுக்கள் நியமிக்கப்பட்டு உரிய காணியை பெறுவதற்கான நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளது இதற்காக ஸ்ரீலங்கா முஸ்ளிம் காங்கிரசின் தலைவரும், நகரத்திட்டமிடல் அமைச்சருமான அல்-ஹாஜ் ரவூப் ஹக்கீமினால் நிதி ஒதுக்கீடு செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.
ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தை மூடியுள்ள மணலை அகற்றி மீனவர்களின் படகுகளுக்கு போக்குவரத்து செய்யக்கூடிய வகையில் ஒழுங்கு செய்வதற்கான பிரேரணை முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து உரிய ஆவனங்களுடன் இது தொடர்பாக துறைமுக அதிகாரசபைக்கும் உரிய அமைச்சுக்கும் ஆவனங்களாக சமர்ப்பித்து உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பதற்காக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள காணியை மீட்டெடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்துவற்காக Pump House அமைப்பதற்கு தேவையான நடவடிக்கை பற்றி ஆராய்ப்பட்டது.
கோணவத்தை நடைபாலத்தை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்வதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
குடாக்கரை கிழல் மேல்கண்டத்தின் ஊடாக செல்லும் அஸ்ரப் வீதியையும் அதனோடு தொடர்புடைய பிரதேசத்தையும் குடியிப்புக்கு ஏற்றவகையில் அபிவிருத்தி செய்தல் தொடர்பான திட்டம் சர்பிப்பதற்கு உரிய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டதுடன் அதனை சமர்பித்து அதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பாகவும் அங்கு ஆராய்ப்பட்டதுடன், ஊர்க்கரை வாய்க்காலை கொங்கீட் வட்கானாக மாற்றி அதன் இருமருங்கிலும் இணைப்பு பாதை அமைத்தல் தொடர்பாகவும் ஆராய்ப்பட்டு அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் ஆராய்ப்பட்டது.
அக்கரைப்பற்று அட்டாளைச்சேஎனை ஆலம்குளம் தீகாவாபி ஊடாக அம்பாறைக்கும் அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை கோணவத்தை ஒலுவில் ஊடாக அக்கரைப்பற்றுக்குமான இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தசமான உள்ளக பஸ் சேவையினை ஆரம்பிப்பதற்கும், நெடுந்தூர பஸ்கள் இரண்டினை இரவு தங்கலுக்காக அட்டாளைச்சேனையில் நிறுத்தி வைத்து அதன் சேவையை ஆரம்பிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன். இதற்காக உரியவர்களுக்கு கடிதம் மூலம் அனுப்பட்டது இச்சேவையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைகள் அனைத்து அங்கு உரிய நடவடிக்கைகளுக்காக எடுக்கப்பட்டது.
மேலும், இக்கூட்டத்தில் ஏனையவகளால் இப்பிரதேசத்தில் இருக்கின்ற ஒலுவில் குப்பைமேட்டை வேற இடத்திற்கு மாற்றுவது தொடர்பாகவும், அட்டாளைச்சேனை மீன்சந்தையை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாகவும், அட்டாளைச்சேனையில் உள்ள் மாடறுக்கும் மடுவத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதற்க உரிய இடங்களை அடையாளப்பட்டுத்துவதற்கு குழுக்கள் நியக்கப்பட்டது. அத்துடன் யானை வேலி அமைப்பது தொடர்பாகவும் , அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், தீகாவாபி போன்ற பிரதேசத்திற்கு அமைக்கப்படவுள்ள வீதிகள், வடிகான்கள், வாழ்வாதார உதவிகளுக்கு நிதிகளும் ஒதுக்கப்பட்டது.
42 சமுர்த்தி பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியளை கையளிப்பது தொடர்பாகவும், மீன்வாடி உரிமையாளர்களுக்கான அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பாகவும், ஒலுவில் காணிப்பிரச்சினைகள் தொடர்பாகவும், பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர்கள் பிரச்சினைகள் தொடர்பாகவும், கோணாவத்தை பிரதேசத்தில் பொது விளையாட்டு மைதானம் அமைப்பது தொடர்பாகவும், வடிகான் பிரச்சினைகள் தொடர்பாகவும், அட்டாளச்சேனை மீனோடைக்கப்பட்டு வீதியில் உள்ள வளைவில் பாதுகாப்பு சுவர் அமைப்பது தொடர்பாகவும், இங்கு முழுமையாக ஆராய்ப்பட்டு உரிய அதிகாரிகளுக்கு இவ்விடையங்களை மேற்கொள்வதற்கான உத்தரவுகளும் பிரப்பிக்கப்பட்டதுடன், தீர்வுகளும் மேற்கொள்ளப்பட்டது.
அட்டாளைச்சேனை கோணாவத்தை பிரதேசங்களில் சட்டபூர்வமாக அரச நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வ்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், மாடறுக்கு மடுவத்தை உடனடியாக இடம் மாற்ற வேண்டும் எனவும் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினால் உத்தரவு பிரப்பிக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் ,ஒருங்கிணைப்புக்குழு இணைத்தவிசாளர் எம்.எஸ். உதுமாலெப்பை, அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உள்ளுராட்சி திணைக்கள பணிப்பாளர் உள்ளிட்டவர்களுடன் துறைசார் நிபுணர்கள், அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.