தமிழ் நாட்டில் ஒபீஸ் இபியஸ் ஆட்சியா ? ஆட்சிக் கவிழ்ப்பா ?

நிலாம்டீன் சிறப்பு கட்டுரை-


ஜெயாலலிதாவின் இறப்பின் பின்பு மன்னார் மாபியா தலைவி பூலான் தேவி என்ற சந்திரமுகி என்ற சசிகலா கட்சி பதவியை பிடிக்க பறிக்க ஆசைபட்டு இப்போது பெங்களூர் சிறைக்குள் கம்பி எண்ணுது.அது சிறை போகுமுன்பு அக்கா மகன் தினகரனை அதிமுக துணை பொது செயலர் பதவி வழங்கியது.

தினகரன் தடி எடித்தவன் எல்லாம் வேட்டைக்காரன் போன்று அம்மாவின் வாகனம் தொட்டு கட்சியை தனது முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். அம்மாவின் ஆர்கே நகர் இடைதேர்தலும் வந்தன ..

சிறையில் இருக்கும் சசியை கேட்காமல் தனது இஷ்டப்படி ஆடினார் 2௦௦ கோடி பணத்தை தண்ணீராக இறைத்தார் ..மோடி மாமு அடித்தார் ஆப்பு.வாக்களிப்புக்கு 2 நாட்கள் இருக்கும் போது தேர்தல் ரத்து.காரணம் தினகரன் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தார்..

இதுதான் காரணம் என்று சொன்னாலும் திமுக வெல்லக் கூடிய அதிக வாய்ப்பு உள்ளதாக மத்திய உளவு பிரிவு மோடிக்கு தகவல் கொடுக்க தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாம் கடந்த டிசெம்பர் மாதம் சொல்லியிருந்தோம் பிஜேபி கொல்லைபுறம் வழியாக தமிழ் நாட்டுக்குள் காலூன்றப் பார்க்கின்றது.அதுதான் இப்போது நடந்து கொண்டு வருகின்றன..

இப்போது அதிமுக ஆட்சிக்கு எதிராக வருவாய்த்துறையை ஏவிவிட்டு ஒரு மிரட்டல் விட்டுப் பார்க்கின்றது மோடி அரசு .

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நெருக்கும் பிஜேபி

பன்னீர்செல்வத்தை இணைத்து அவர் பக்கமுள்ள அனைவர்களையும் சேர்த்துக் கொண்டு அதிமுக ஒரே ஆட்சி நடைபெற வேண்டும் .நீங்கள் விரும்பும் அமைச்சை எடுக்கலாம். உழைக்கலாம் .ஆனால் முதல்வர் பதவி என்பது பன்னீர்செல்வமாகத்தான் இருக்க வேண்டும் என்று நேரடியாக கராராக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தம்பிதுரை எம்பியிடம் சொல்லி விட்டார்.

இதற்க்கு நீங்கள் சம்மதிக்க வில்லை என்றால் அதிமுக அமைச்சர்களின் வீட்டில் அவர்களின் பினாமிகளின் வீட்டில் வருமான வரி அதிகாரிகளை கொண்டு ரைடு நடத்தி உங்கள் ஆட்சியை கலைக்க வழிவகுப்போம் என்று சொல்லி விட்டார்.உடன்பட்டு வாங்க.. அல்லது ஒதுங்கிப் போங்க இதுதான் எடப்பாடி பழனிசாமிக்கு இறுதி எச்சரிக்கையாக பி.ஜே.பி கொடுத்திருக்கும் வாய்ப்பு. எடப்பாடிக்கு பி.ஜே.பி கொடுத்திருக்கும் இறுதி சந்தர்ப்பம் இது..

தி.மு.க-வை ஆட்சி அமைக்க கூடாது!

ஆட்சியையும், கட்சியையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில் பி.ஜே.பி தலைமை காய்நகர்த்தி வருகிறது. தமிழக அரசை, மத்தியில் தங்களுக்கு உள்ள அதிகாரத்தை வைத்து வளைத்து விடலாம்; ஆனால், கட்சியை வளைப்பதற்கு என்ன செய்வது? என்பதுபற்றி தீவிரமாக யோசித்து பி.ஜே.பி தலைமை.

அ.தி.மு.க என்ற கட்சி இருந்தால் மட்டுமே தி.மு.க-வை தட்டிவைக்க முடியும். தமிழகத்தில் பி.ஜே.பி-யை நிலை நிறுத்த வேண்டுமானால், அ.தி.மு.க தங்களுக்குத் தேவை என்ற முடிவில் பி.ஜே.பி உள்ளது. இரண்டு அணிகளாக பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க-வை ஒன்றிணைக்கும் பிளானில்தான் இப்போது பி.ஜே.பி இறங்கியுள்ளது. அதிமுகவின் ஆட்சியை கலைப்பதின் மூலம் திமுக ஆட்சியை பிடிக்க கூடாது என்பதில் மோடி அரசு குறியாக உள்ளது.பிஜேபி தமிழ் நாட்டில் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையும் திமுகவுக்கு சாதமாக அமைந்து விடக் கூடாது என்பதில் மிக உசாராக உள்ளது.

ஓ.பி.எஸ்சை பிஜேபி விரும்பக் காரணம் என்ன


அ.தி.மு.க-வில் கலகத்தை எதிர்பார்த்து காத்திருந்த பி.ஜே.பிக்கு சசிகலா மற்றும் அவர் குடும்பம் இல்லாத மாற்று ஒருவர் ஓ.பன்னீர் செல்வம்தான் பிஜேபியின் தெரிவாக இருக்கின்றது. பன்னீரின் ஒவ்வொரு அசைவிற்குப் பின்னாலும், பலமான சக்தி இருந்ததை அ.தி.மு.க-வினர் அனைவரும் அறிந்திருந்தனர். அதே பன்னீருக்கு மக்கள் மத்தியில் இருந்த நம்பிக்கை பி.ஜே.பி-யினரும் அறியாமல் இல்லை. பிஜேபியின் எதிர்காலத் திட்டத்திற்கு உடன்படும் ஆளாக பன்னீர் இருப்பார் என்ற நம்பிகைக்யை துக்ளக் பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி பிஜேபிக்கு அழுத்தமாக சொல்லியுள்ளார் .தமிழ் நாட்டில் அதிமுகவை வழிக்கு கொண்டுவரும் திட்டம் மற்றும் பன்னீர்செல்வதிக்கு ஆலோசனை வழங்கும் முழுப் பொறுப்பு மற்றும் பிஜேபி யின் தமிழ் நாட்டு தூதுவர் பொறுப்பு மற்றும் ஏனைய பொறுப்பு துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியிடம் கொடுக்கப்பட்டுள்ளது .

தினகரன் நிலை


இந்த திட்டத்தின் அடிப்படையில்தான் அடுத்தடுத்த தாக்குதல்கள்.தினகரனுக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடி தொடங்கி ஆர்.கே.நகர் தேர்தல் ரத்துவரை .இப்போது தினகரனுக்கு உள்ள நிலை என்றால் பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்ற நிலைக்கு வந்து விட்டார்..

தேர்தல் ஆணையத்தை 6௦ கோடி லஞ்சம் கொடுத்து வளைக்க பார்த்தார் என்று கையும் களவுமாக சிக்கி விட்டார் .பணத்துடன் தினகரனின் பினாமி டெல்லியில் பிடிபட்ட பின்னர் தினகரனை டெல்லி போலிஸ் பிடித்து அள்ளிச்செல்லும் நிலையில் உள்ளார் டெல்லி போலிஸ் தினகரன் மீது வழக்கு தாக்கல் செய்துள்ளது.. இப்போது எந்த நேரமும் தினகரன் கைது செய்யப்படலாம் என்ற நிலை. தேர்தல் ஆணையத்தை லஞ்சம் கொடுத்து வளைக்க பார்த்த விடயம் என்பது சிறை செல்லுவதும் 1௦ ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்ற நிலைக்கு வந்துள்ளது .அதனால் தினகரன் அடங்கி விட்டார்.

பி.ஜே.பி. தரப்பில் இருந்து அமைச்சர் வெங்கையாநாயுடு மற்றும் அமீர்ஷா பன்னீர்தரப்பை தொடர்பு கொண்டு சில விஷயங்களை பேசியுள்ளார்கள். அதற்கு பன்னீர் தரப்பும் ஓ.கே சொல்லியுள்ளதாம். இரண்டு அணிகளும் ஒன்று சேருங்கள், கட்சியையும், சின்னத்தையும் திரும்பப் பெற்று விடலாம். அதன்பிறகு ஆட்சியை நடத்துங்கள். ஜனாதிபதி தேர்தல் முதல் நாடாளுமன்ற தேர்தல் வரை எங்கள் எண்ணப்படி அனைத்தும் நடக்க வேண்டும்” என்ற ரீதியில்தான் பன்னீரிடம் பேசியுள்ளார்கள்.

சசிகலா இல்லாத அ.தி.மு.க!

பன்னீர்தரப்பு இதற்கு ஒப்புக்கொண்டாலும் தினகரன் மற்றும் சசிகலா கையில் கட்சியின் பவர் இருக்கும் வரை, எடப்பாடி தரப்பு தங்களுக்கு உடன்படாது என்பதை பி.ஜே.பி-யிடம் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி சொல்லியுள்ளார். சசிகலா தரப்பை வைத்துக் கொண்டு இரண்டு அணிகளுக்கும் சமரசம் பேசுவதற்கு வாய்ப்பு இல்லை. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரனின் செல்வாக்கு எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பதை அறிந்த அமைச்சர்கள் சிலரே சொல்லி விட்டார்கள்.

அ.தி.மு.க என்ற கட்சியின் பிம்பமாக, ஜெயலலிதாவைத்தான் இப்போதும் அடித்தட்டு மக்கள் பார்த்து வருகிறார்கள். சசிகலா தரப்பு தொடர்ந்து கட்சியில் நீடித்தால், அ.தி.மு.க என்ற கட்சி அதாளபாதாளத்திற்கு சென்றுவிடும் என்று அமைச்சர்கள் கருதுகிறார்கள். இந்த நேரத்தில் சசிகலா மற்றும் தினகரன் மீது அதிரடி அஸ்திரங்களை ஏவி, அவர்களை வீழ்த்தி விட்டால் இரண்டு அணிகளும் ஒன்று சேருவதில் பிரச்னை இருக்காது என்று ஆசிரியர் குருமூர்த்தி அமைச்சர் வெங்கையாநாயுடு நாயுடுவுக்கு சொல்லியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் தினகரன் மீதான வழக்கு விசாரணையை முதலில் வேகப்படுத்த முடிவு செய்துவிட்டது மத்திய அரசு. அதேபோல் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வானது குறித்த முடிவும் அவர்களுக்கு எதிராக வரப்போவதாக கூறப்படுகிறது.

பன்னீரும் எடப்பாடியும்

எடப்பாடி தரப்பிடம் பேச்சுவார்த்தை ஒன்றை பி.ஜே.பி விரும்பியுள்ளது.அதனால் அதிமுக தம்பித்துரை எம்பி மூலம் பேசி வருகிறது. பன்னீர் தலைமையில் நீங்கள் இணைந்து செயல்படுங்கள் என்று தம்பிதுரை எம்பியிடம் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள், அந்தப் பேச்சுவார்த்தையின் வெளிப்பாடு என்பது இரண்டாம் இடத்தில் எடப்பாடி அமர வைக்கப்படுவார். ஆட்சியும், கட்சியும் பன்னீர் வசம் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது. அதாவது பன்னீர்செல்வம் முதல்வர் பதவி மற்றும் அதிமுக பொது செயலர் பதவியும் கொடுக்கப்பட வேண்டும் அதற்க்கு அதிமுக எம்எல்ஏ கள் சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இப்போது அமைச்சரவையிலே தினகரன் ஆதரவு அமைச்சர்கள், எடப்பாடி ஆதரவு அமைச்சர்கள், நடுநிலையாளர்கள் என கோஷ்டிகள் உள்ளது. தினகரனின் ஆதரவாளராகத்தான் அமைச்சர் விஜயபாஸ்கர் இருந்து வந்தார். அவருக்கு கொடுத்த நெருக்கடி மற்ற அமைச்சர்களுக்கு கொஞ்சம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தினகரனுக்கு ஆதரவாக இருக்கும் அமைச்சர்களிடம் தினகரனை விட்டு தள்ளி நில்லுங்கள். உங்களுக்கு எந்த பிர்சனையும் வராது என்ற தகவலை பி.ஜே.பி தரப்பு எடுத்து சொல்லியுள்ளது காரணம், தினகரனை தனிமைப்படுத்தினால் மட்டுமே, அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளையும் இணைக்க முடியும் என்ற முடிவில் பிஜேபி உள்ளது..

ஆட்சி கலைப்பா?

இத்தனை திட்டங்களையும் போட்டுள்ள பி.ஜே.பி தலைமை ஒருவேளை எடப்பாடி தரப்பு தங்களின் திட்டங்களுக்கு உடன்படாமல் சசிகலா தரப்பிற்கு தொடர்ந்து விசுவாசம் காட்டுவாரேயானால், ஆட்சியை கலைக்க தயங்க மாட்டோம் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள். அதற்கு ஏற்றால் போல் புதிய ஆளுனரை மோடி நியமிக்கவுள்ளார்.

வரும் ஜூலை மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் நடக்க இருப்பதால், எந்த முடிவையும் அதன் பிறகு வைத்துக் கொள்ளலாம், இரண்டு ஆண்டுகள் கவர்னர் ஆட்சியை தமிழகத்திற்கு கொண்டுவந்து, மத்திய அரசின் திட்டங்களை வைத்தே மாநிலத்தில் பி.ஜே.பி-யை வளர்த்து விடலாம் என்று பிஜேபி தலைமை கருதுகிறது. வரும் 2019-ம் ஆண்டில், நாடாளுமன்ற தேர்தலோடு, தமிழக சட்டசபைத் தேர்தலையும் நடத்தலாமா? என்ற கணக்கிலும் உள்ளது பி.ஜே.பி. மேலிடம் காய்களை நகர்த்தி வருகிறது.


இப்போது நாங்கள் அ.தி.மு.க-வை ஆட்சியில் அமர வைத்தாலும் எங்கள் நோக்கம் எதிர்காலத்தில் தமிழகத்தில் பி.ஜே.பி ஆட்சிக்கு வழிவகை செய்வதுதான் என்ற நோக்கில் பி.ஜே.பி நினைக்கின்றது .

தம்பிதுரை எம்பி முதல்வராக முயற்சி

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தம்மை முதல்வராக்க வேண்டும் என்று சசிகலாவிடம் போராடியவர் தம்பிதுரை.. இந்த தம்பிதுரை தன்னை முதல்வராக நியமிக்குமாறு கடந்தவாரம் வெங்கையாநாயுடு விடம் ஒரு கோரிக்கை முன்வைத்தார் .அத்துடன் தான் முதல்வரானால் மத்திய அரசின் திட்டங்கள் தொட்டு சகல ஒத்துழைப்பும் வழங்குவேன் என்று சொல்லியுள்ளார் ..ஆனால் தம்பியை பிஜேபி விரும்பவில்லை.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், யார் முதல்வர்? என்ற கேள்வி எழுந்த போது, தம்மை முதல்வராக்க வேண்டும் என்று சசிகலாவிடம் போராடியவர் தம்பிதுரை.

ஆனால், சசிகலாவோ எடப்பாடியை முதல்வராக்கவே விரும்பினார். ஆனாலும், வெங்கையா நாயுடுவின் தலையீடு காரணமாகவும் வழக்குகள் குறித்த மிரட்டலுக்கும் பின்னர் பன்னீர்செல்வம் முதல்வர் ஆகிவிட்டார்.

அதன்பிறகு, சசிகலா முதல்வராக வர முடியாத நிலை வந்தபோதும், தம்பிதுரை தம்மால் முடிந்த அளவுக்கு காய் நகர்த்தியும் எடப்பாடிக்கே முதல்வர் வாய்ப்பு கிடைத்தது.

அதனால், தம்முடைய டெல்லி செல்வாக்கை பயன்படுத்தி, தமது விசுவாசத்தை நிரூபிக்க முயற்சித்தார் தம்பிதுரை,ஆனால் அவர் சொல்வது எதுவும் டெல்லியில் எடுபடாத நிலை.

இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமான வரி சோதனை நடத்தியது .மேலும், முதல்வர் எடப்பாடியின் பெயரும் சோதனை பட்டியலில் இருப்பதால், அவ்வாறு செய்யாமல் இருக்குமாறு மிகவும் வலியுறுத்தி கேட்டுக் கொண்டிருக்கிறார் தம்பிதுரை.

ஒருவேளை, வேறு வழியின்றி முதல்வர் எடப்பாடி வீட்டில் சோதனை நடத்தினால், அவர் பதவி விலக நேரும்.

அப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தால், நான் முதல்வராக பாஜக ஆதரவு தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தாம் பாஜகவுக்கு மிகவும் விசுவாசமாக இருப்பதாகவும் தம்பிதுரை பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவிடம் கூறி இருக்கிறார்.

ஆனால் தம்பிதுரையை பிஜேபி விரும்பவில்லை.இப்போது களம் மாறுகின்றது .தம்பிதுரை பிஜேபியின் எண்ணத்தை முற்றாக எடை போட்டுவிட்டார். சசிகலா தினகரன் மற்றும் மன்னார்குடி கும்பல் இல்லாத அதிமுகா வும் பன்னீர்செல்வம் முதல்வர் கொண்ட ஆட்சியைத்தான் விரும்புகின்றது.. இதற்கு எதிராக இப்போதைய அதிமுக முரண்டு பிடித்தால் ஆட்சி கலையும்.

இதைப் புரிந்து கொண்டு தத்தமது ஆசனங்களை காப்பாற்ற வேண்டுமானால் தினகரனை ஒதுக்கி ஒன்றாக இணைவோம் என்ற முடிவுக்கு தம்பிதுரை மற்றும் முதல்வர் எடப்பாடி வந்து விட்டார்கள்.

அதனால் தினகரனை முற்றாக ஒதுக்கிவிட்டு சில அமைச்சர்கள் சற்றுமுன்னர் சென்னையில் ஆலோசனை நடத்தி வருகின்றார்கள். மிக விரைவில் ஒபீஸ் அணியுடன் எடப்பாடி அணி பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்கள்.

அதனால் ஆட்சி கலைப்பு நடைபெற வாய்ப்பு இல்லை .இந்த வாரம் மீண்டும் ஒபீஸ் முதல்வர் ஆகலாம் .எடப்பாடி துணை முதல்வர் ஆகலாம். அதன்பின்பு அதிமுக பொது செயலர் பதவியும் ஒபீஸ் க்கு தானாக வந்துவிடும்.

அதிமுக என்ற போர்வையில் தமிழகத்தில் பிஜேபி ஆட்சி நடக்கும்..ஆனால் பிஜேபி நினைப்பது போன்று தமிழ் நாட்டில் காலூன்றும் கனவு ஒரு போதும் பலிக்காது.காரணம் தமிழ் நாட்டு மக்கள் ஒரு போதும் பிஜேபியை ஏற்றுக்கொள்ளவில்லை. மற்றும் திமுக பலமாகவுள்ளது.ஆகக் கூடினால் எதிர்வரும் சட்டசபை தேர்தலில் 10-12 ஆசனம் பெறலாம் .ஆனால் மின்வாக்கு பதிவு வருமானால் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை மொட்டு சின்னம் வரும்படி செய்தால் பிஜேபி பெரும் வெற்றி பெறும்.

தேர்தல் ஆணையத்தில் காவிக்கார்கள் பெருமளவு உள்ளதால் மின்வாக்கு மெசினில் கள்ளவேலை செய்து பிஜேபியை வெற்றி பெற வைப்பார்கள். அதனால் திமுக என்ன செய்தாவது மின்வாக்கு முறையை ஒளித்து வாக்கு சீட்டு முறை என்ற பழைய முறையை கொண்டு வந்தால் மட்டுமே தமிழ் நாட்டை பிஜேபியிடம் இருந்து காப்பாற்ற முடியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -