அஸ்ஸஹீட் சரீஃப் அலி படுகொலை செய்யப்படா விட்டால் அவர்தான் கல்குடாவின் அரசியல் தலைமை.!

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
1990ம் ஆண்டு விடுதலை புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட ஓட்ட அலி எனும் அஸ்ஸஹீட் சரீஃப் அலி ஆசிரியர் அன்று படுகொலை செய்யப்படா விட்டிருந்தால் இன்று கல்குடாவின் அரசியல் தலைமையாக இருந்திருப்பார் என பகிரங்கமாக வரலாற்றில் அழிக்க முடியாத யதார்தத்தினை வெளிப்படுத்தினார் எம்.ரி.எம்.அஸ்ரஃப்.

கல்குடா ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழாவினை ஒட்டி நடாத்தப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கட் சுற்றுப்போட்டியில் இறுதி போட்டியில் உரையாற்றும் போதே மேற் கண்டவாறு மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பிரதி கல்வி பணிப்பாளர் எம்.ரி.எம்.அஸ்ரஃப் தெரிவித்தார்.

26.04.2017 ஓட்டமாவடி அமீர் விளையாட்டரங்கில் இடம் பெற்ற குறித்த கிரிக்கட் சுற்றுபோட்டிக்கான முழு அனுசரணையினையும் சமூக சேவையாளர் சாட்டோ வை.எல்.மன்சூர் வழங்கி இருந்ததோடு, இறுதி போட்டியில் ஓட்டமாவடி தேசிய பாடசாலையும் வாழைச்சேனை அந்-நூர் தேசிய பாடசாலையும் பல பரீட்சை நடாத்தியதில் இறுதியில் ஓட்டமாவடி தேசிய பாடசாலை சாம்பியனானது.

அத்தோடு பிரதம அதீதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து சிறப்பித்தார். மேலும் பிரதேசத்து கல்விமான்கள், அதிபர்கள், அரசியல் முன்னெடுப்பாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை முக்கிய விடயமாகும்.

இறுதி போட்டியில் இடம் பெற்ற முக்கிய நிகழ்வின் காணொளியோடு அஸ்ஸஹீட் சரீஃப் அலி ஆசிரியரை பற்றிய வரலாற்று பதிவாக உரையாற்றிய எம்.ரி.எம்.அஸ்ரபின் முழு உரையின் காணொளியும் எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -