எஸ்.ஹமீத்-
இளம் விஞ்ஞானிகளுக்கான சர்வதே மாநாடு ( The International Conference of Young Scientist-ICYS) நடாத்திய போட்டியொன்றில் இலங்கையின் இளம் விஞ்ஞானியான நலந்தியன் ரகிந்து விக்ரமரத்ன வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 15 வயதே நிரம்பிய இந்த மாணவன் 40 நாடுகளைச் சேர்ந்த 300 மாணவர்கள் பங்குபற்றிய போட்டியிலேயே ஆஸ்துமா நோய்க்கான தீர்வொன்றைச் சமர்ப்பித்து இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.
இளம் விஞ்ஞானிகளுக்கான சர்வதே மாநாடு ( The International Conference of Young Scientist-ICYS) என்பது உலக பௌதிக போட்டிகளுக்கான மன்றத்தின் (World Federation of Physics Competition) ஓர் அங்கத்துவ அமைப்பாகும்.
ஜெர்மன் நாட்டின் ஸ்டட்கார்ட் நகரில் இந்தப் போட்டி நிகழ்ச்சி நடந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னம் இலங்கையில் நடைபெற்ற தேசிய இளம் விஞ்ஞானிகள் சங்கத்தின் 2016/2017 வருடத்திற்கான சிறந்த இளம் விஞ்ஞானி விருதினையும் இந்த மாணவன் வென்றுள்ளார்.