வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்து தமிழர்களுக்கான தீர்வை பெற சிங்கள மக்களுடன் கிழக்கு முஸ்லீம்களை பகைமை படுத்தி தங்களுக்கேற்றாப் போல் முஸ்லீம்களை பயன்படுத்த போகின்ற நிகழ்ச்சி நிரல் நடந்தேறுகிறது. அண்மையில் சுவிஸ் நாட்டுக்கு சென்று வந்த அம்பாரை பிரதி அமைச்சர் ஒருவர் இதற்க்கு இடை தரகு வேலைக்காக தயாராகி இருக்கிறார்.
நாளை தமிழ் மக்கள் பேரவையின் ஹர்த்தால் இருக்கதக்கதாக மாணிக்க மடு பிரச்சினையை மையப்படுத்தி இதே பிரதி அமைச்சரின் திட்டமிடலோடு முஸ்லீம்களையும் களத்தில் இறக்க திட்டமிடுகிறார்கள். மக்கள் ஹர்த்தால் அனுஷ்டிக்க வேண்டுமென்றால் கிழக்கு மாகாணத்தை பிரதிநதித்துவப்படுத்தும் அனைத்து மக்கள் பிரதிநதிகளும் எதிர்தரப்புக்கு மாற சொல்லுங்கள்.
உங்களுடைய அனைத்து தந்திரங்களும் வெளியில் வந்து கிடக்கிறது.
ஞானசார எனும் ஒருவன் பொதுபல சேனா எனும் அமைப்பின் தலைவராக இருந்தவனை அம்பாரை கச்சேரியில் வைத்து அரச அதிபரை அச்சுறுத்தி பேசுமளவு அதிகாரம் நல்லாட்சி வழங்கியது.
நீதிபதியின் உத்தரவை வீதியில் கிழத்தெறிய அதிகாரம் நல்லாட்சி வழங்கியது.
நீங்கள் நல்லாட்சி என்று வாக்குகளை பெற்று இந்த மக்களை ஏமாற்றியது எதற்காக..?
உங்களை நம்பி வாக்களித்த மக்களின் பிரச்சினை உம்மால் தீர்வு காண முடியாது போனால் எதற்காக அரசில் அங்கம் வகிக்கிறீர்..?
வீணாக தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் தரகு பணங்களை வைத்து சுகபோக வாழ்வும் மக்களை சூடாக்கும் வசனங்களும் எந்த நாளும் வெற்றியடைய போவதில்லை.