நேற்று சாய்ந்தமருதில் தாருஸ்ஸலாம் மறைக்கப்படாத உண்மைகள் என்ற புத்தக வெளியீட்டுவிழா நடைபெற்றது. இது முழுக்க முழுக்க முஸ்லிம் காங்கிரசுடன் சம்பத்தப்பட்ட விடயம் என்பதனால் ஒவ்வொரு ஊரிலும் உள்ள கட்சி போராளிகள், ஆதரவாளர்கள் அழைக்கப்பட்டார்கள்.
இதற்கான அழைப்பிதழ்கள் ஒவ்வொரு ஊரிலும் உள்ள மத்திய குழு தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் வழங்கப்பட்டது.
இது சாய்ந்தமருதில் நடைபெறுகின்ற நிகழ்வு என்பதனால் இவ்வூரில் உள்ள கட்சி முக்கியஸ்தர்கள் அதிகமாணவர்களை அழைக்க வேண்டும் என்பதற்காக அழைப்பிதழ்களில் அதிகமானவை சாய்ந்தமருது முக்கியஸ்தர்களுக்கு வழங்கப்பட்டது.
ஆனால் அந்த அழைப்பிதழ்கள் சாய்ந்தமருதிலுள்ள கட்சி போராளிகளுக்கோ, ஆதரவாளர்களுக்கோ, முக்கியஸ்தர்களுக்கோ விநியோகிக்கப்படவில்லை. அதனால் சாய்ந்தமருதில் நடைபெற்ற இந்நிகழ்வில் இவ்வூரை சேர்ந்தவர்களை காண்பது மிகவும் அரிதாக காணப்பட்டது. குறிப்பாக எனக்குக்கூட அழைப்பிதழ்கள் வழங்கப்படவில்லை.
இது, இந்த நிகழ்வில் மட்டுமல்ல, தொடர்ந்து ஒவ்வொரு விடயங்களிலும் இப்படித்தான் நடைபெற்று வருகின்றது. ஏனைய ஊர்களுடன் ஒப்பிடுகையில் சாய்ந்தமருதில் மட்டும் ஏன் இந்த கீழ்த்தரமான நிலைமை?
முஸ்லிம் காங்கிரசுக்கென்று அதிகமான வாக்கு வங்கிகளைக்கொண்ட சாய்ந்தமருதில் கட்சி கட்டமைப்போ, ஆளுமையுள்ள அதிகாரிகளோ இல்லை. தங்களது பொக்கட்டுக்குள் கட்சியை வைத்துக்கொண்டு, தங்களைப்பற்றி மட்டும் சிந்தித்துக்கொண்டு உலாத்துபவர்களாகவே கானாப்படுகின்றார்கள்.
அங்கு கட்சி போராளிகள், ஆதரவாளர்கள் சென்று பேசிக்கொண்டிருப்பதுக்குக் கூட இடமில்லை. மாலை ஆறு மணியானால் யாரையும் சந்திக்கவும் முடியாது. எத்தனையோ இளைஞ்சர்களும், ஊரில் உள்ள பல முக்கியஸ்தர்களும் முஸ்லிம் காங்கிரசில் சேர்ந்து துரிதமாக இயங்குவதற்கு ஆவலாக உள்ளார்கள். ஆனால் அவர்களை அரவணைத்து செயல்படக்கூடிய திறந்த மனம் கொண்ட அதிகாரிகள் அங்கு இல்லை. அதனாலேயே சிலர் மாற்று முகாம்களை நாடுகின்றார்கள்.
திறமையான செயல்பாடுள்ள புதியவர்கள் கட்சியில் உள்வாங்கப்பட்டால் செயல்திறன் அற்ற தங்களது இடம் பறிபோய்விடும் என்ற பயம் இருக்க வேண்டும் அல்லது முஸ்லிம் காங்கிரசை அழிக்க வேண்டும் என்று செயல்படுகின்றவர்களுடன் மறைமுகமாக டீல் பண்ணி இருக்க வேண்டும். இந்த இரண்டையும் தவிர்ந்த வேறு எந்த காரணமும் இருக்க முடியாது.
தங்களுக்கு கட்சியில் இத்தனை வருட செர்விஸ் இருக்கின்றது என்றும், தாங்கள் இந்தியப்படையினர்களின் காலத்தில் அப்படி செய்தோம், இப்படி செய்தோம், பத்திரிக்கை விற்றோம் என்றெல்லாம் புராணக்கதைகளை கூறுவதன் மூலம் இன்றய நவீன காலத்தில் கட்சிக்கு எந்தப்பயனும் கிடைக்கப்போவதில்லை.
கட்சி வளர்ச்சி பற்றி சிந்திக்காமல், இருக்கின்ற மக்கள் ஆதரவை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, எதிர்கால தங்களது சுயநல அரசியலை பற்றி சிந்திக்கின்றவர்களை கட்சியைவிட்டு துரத்த வேண்டும். இப்படியானவர்களினால்தான் தலைவருக்கு நெருக்கடிகளும், விமர்சனமும் அதிகமாக ஏற்படுகின்றது.
எனவே புராணக்கதைகள் கூறுவதை விடுத்து, நல்ல செயல்திறன் உள்ள புதியவர்களை கட்சியில் உள்வாங்கப்பட வேண்டும். செயல்பாடுகள் இல்லாத சுயநலவாதிகளின் கைகளில் இருக்கின்ற பதவிகளை புடுங்கிவிட்டு இன்றைய காலத்துக்கேற்ற செயல் திறனுள்ளவர்களின் கைகளில் பொறுப்புக்கள் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் கட்சியின் வளர்ச்சியில் முன்னேற்றம் கிடைப்பதுடன் தலைவருக்கு எதிராக எழும்புகின்ற விமர்சனங்களை குறைக்க முடியும்.
முகம்மத் இக்பால்,
சாய்ந்தமருது.