காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் றமீஸ் தலைமையிலான நிர்வாகசபை உறுப்பினர்களுக்கும் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையிலான நல்லுறவு சந்திப்பு நேற்று 12.03.2017 ஞாயிற்றுக்கிழமை இராஜாங்க அமைச்சரின் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இச் சந்திப்பின் போது சன்றைஸ் விளையாட்டுக் கழக முன்னேற்றம், வீரர்களின் நிலையான தொழில்வாய்ப்பு ரீதியான விடையங்கள், மைதான ஒழுங்கமைப்பு, ஏனைய கழக வீரர்கள் எதிர் நோக்கும் சவால்கள் போன்ற அநேக விடையங்கள் கலந்துரையாடப்பட்டன. கழகத்தின் முன்னேற்றத்துக்குரிய வசதிகளையும், கழகத்தினரின் வேண்டுகோள்களையும் தன்னால் முடியுமானவரை செய்து தருவதாக இராஜாங்க அமைச்சர் அவர்களால் கூறப்பட்டது.
இதன் போது சன்றைஸ் விளையாட்டுக் கழகம் அரசியல் ரீதியாக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுடன் இணைந்து செயற்படுவது, கழக ரீதியாக முழு ஆதரவையும் வழங்குவது என்ற நற் செய்தியும் நிர்வாகத்தினரால்-வழங்கப்பட்டது.
ஹம்ஸா கலீல்.