21ம் திகதி திருக்கோவில் வைத்தியசாலை “ஆதார வைத்தியசாலையாக” தரமுயர்த்தப்படும்.!

அபு-அலா- 
ல்முனை பிராந்தியத்தின் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளில் 04வது வைத்தியசாலையாக திருக்கோவில் வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்காக வேலைத்திட்டங்கள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீரின் மேற்கொள்ளப்பட்டு இன்று வெற்றிகரமாக குறித்த வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 21ஆம் திகதி இவ்வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயத்தப்பட்டுள்ளது என வெளிப்படுத்தும் நிகழ்வு தொடர்பிலான கலந்துரையாடல் இன்று (13) வைத்தியசாலையில் அமைச்சர் மேற்கொண்டார். 

அங்கு உரையாற்றிய அமைச்சர், 

குறித்த வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாக வர்த்தமாணி அறிவித்தலுடன் தரமுயர்த்தப்பட்டுள்ளது அது வெற்றிகரமாக நிறைவேறியமை இட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன் எனவும் குறித்த வைத்தியசாலை அதிகம் தமிழ் மக்கள் வாழும் இடமாகவுள்ளது இப்பிரதேச மக்களுக்காக கட்டாயம் தரமுயத்தப்படுவது அவசியமாகும். அது போல் இவ்வைத்தியசாலை பெயருக்கு மாத்திரம் ஆதார வைத்திசாலையாக செயறபடாமல் நிறைந்த சேவைகளை முடிந்தளவு பொதுமக்கள் பெற வேண்டும் அதற்கான சேவைகளை செய்வதற்கு இங்குள்ள வைத்திய அதிகாரிகளும், உத்தியோகத்தர்களும் அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என எதிர்பார்க்கின்றேன். 

அத்துடன் இவ்வைத்தியசாலைக்கு தேவையான இயந்திரங்கள், தேவையான பொருட்கள் தொடர்பில் நாம் கண்க்கெடுத்துள்ளோம் அதனை செய்வதற்காக எமது பிராந்திய அலுவலகம் செயற்படும் எனவும் எதிர்பார்ப்பதுடன். எதிர்வரும் 21ஆம் திகதி மத்தியரசினால் இவ்வைத்தியசாலைக்கு 10மில்லியண் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் இவ்வைத்தியசாலைக்கு தியேட்டர் அமைக்கபடும் எனவும் தெரிவித்தார். 

இந்நிகழ்வின் போது, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச்செயலாளர், கட்ட நிர்மாணத்திணைக்களத்தின் மாகாணப்பணிப்பாளர், கட்டிட திணைக்களத்தின் பிரதம செயலாளர், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய அத்தியட்சகர், கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையில் அதிகாரிகள்,கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி உள்ளிட்டவர்களுடன் வைத்தியாசலை உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -