அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய நிருவாக கட்டிட திறப்பு விழா இன்று (03) மாலை இடம்பெறவிருந்த நிலையில் சர்ச்சைக்குறிய விடயமாக மாறி குறித்த நிகழ்வு இரத்து செய்யப்பட்டுள்ளது
குறித்த நிகழ்வின் நினைவுப்பெயர் பலகையிலும், அழைப்பிதலிம் அப்பிரதேச அமைச்சரான ஏ.எல். முஹம்மட் நஸீரின் பெயர் இல்லாததால் அங்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் போராளிகள் மேற்கொண்ட எதிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து குறித்த நிகழ்வுகள் யாவும் இரத்து செயப்பட்டது.
மேலும், குறித்த இடத்தில் கருப்பு கொடி கட்டப்பட்ட நிலையில் அம்மக்கள் தங்களது எதிர்ப்புக்களையும், வெளிப்படுத்தினர்.
அங்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது,