சப்னி அஹமட்-
தெஹியத்தக்கண்டி நாவமேதகம, பிரதேசத்தின் மிக முக்கிய தேவையாக இருந்த “மத்திய ஆயுள்வேத மருந்தகம்” திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று(02) கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் கலபதிகே சந்திரதாஸ தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, சமூக சேவைகள், சிறுவர் நன்னடத்தை, கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் கலந்து கொண்டு திறந்து வைத்து மக்களிடம் கையளித்தார்.
இதன் போது, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான மெத்தானத்தா டி சில்வா, மஞ்சுல பெணாண்டோ, கிழக்கு மாகாண சுதேச வைத்திய ஆணையாளர் ஸ்ரீதர் உள்ளிட்டவர்களுடன் முக்கிய வைத்திய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.