துரைவி 86 வது பிறந்த தின நினைவுப்பேருரையும் விருது வழங்கலும் விழா கடந்த 04.03.2017 கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.. திரு தெளிவத்தை ஜோசப் அவர்களின் தலைமையில் நடைபெற்ற, இவ்விழாவில் பாராளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான திரு மல்லியப்புசந்தி திலகர் அவர்கள் ”சமகால அரசியல் குரலாக மலையக இலக்கியம் ‘’ எனும தலைப்பில் துரைவி நினைவுப் பேருரை நிகழ்த்தினார். வரவேற்புரையையும் நிகழ்ச்சித் தொகுப்பினை மேமன்கவி வழங்கினார்.
2016 ஆம் ஆண்டுக்கான மொழிபெயர்ப்பு நூலுக்கான துரைவி விருது அல்லாமா இக்பாலின் “காரவான் கீதங்கள்’ கவிதைத் தொகுப்பினை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளரும் கவிஞருமான பண்ணாமத்துக் கவிராயர் அவர்கள் தலைவர் தெளிவத்தை ஜோசப் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
2016 ஆம் ஆண்டுக்கான ஆய்வு நூலுக்கான துரைவி விருதினை பேராதனைப் பலைகலைக்கழக தமிழ்த்துறை உதவி விரிவுரையாளர் பாஸ்கரன் சுமன் தனது “ திரிலிருந்து தெரிதல்-பண்பாட்டு உரையாடல் எனும் நூலுக்கு இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
மறைந்த கல்வயல் வே.குமாராசாமி, மற்றும் எழுத்தாளர் பிபிலை ஜெயபாலன், தமிழக பத்திரிகையாளர் சோ இராமசாமி ஆகியோருக்கு மௌனஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வுக்கான நன்றியுரையை ராஜ்பிரசாத் துரை விஸ்வநாதன் நிகழ்த்தினார்.