எம்.எம்.ஜபீர்-
சம்மாந்துறை அல்-அமீர் வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டியில் ஜெஸ்மின் இல்லம் 221 புள்ளிகளைப் பெற்று இவ் வருடத்தின் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.
சம்மாந்துறை அல்-அமீர் வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஐ.மாஹிர் தலைமையில் நேற்று (04) பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் மன்சூர் ஏ.காதர், சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக உதவிக்கல்வி பணிப்பாளர் ஏ.முஸ்தாக் அலி, சம்மாந்துறை கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.ஏ.சபூர் தம்பி, சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர் கே.எம்.எஸ்.நஜாஸ், சட்டத்தரணி ஏ.எம்.அறுஸ், பாடசாலைகளின் அதிபர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள்,பொது மக்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இவ்விளையாட்டுப் போட்டியில் லோடஸ் இல்லம் 218 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும், சன் புளவர் இல்லம் 179 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டதுடன் இவ் விளையாட்டுப் போட்டி 15 வருடங்களுக்கு பிறகு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.