கடந்த வெள்ளிக்கிழமை முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் செயலாளர் நாயகம் ஹசனலி தலைமையில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்த கூட்டத்துக்கு பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டனர் அதில் மு.க அல்லாத கட்சிகளின் போராளிகள் அதிகமாக கலந்துகொண்டனர்.
அனைவரும் ஆவலுடன் இரவும் பாராமல் விழித்துக் கொண்டு நடு வீதியில் நின்றனர். அனைவரும் எதிர்பார்த்தது ஹஸனலி நிச்சயம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமை பற்றி விமர்சிப்பார் அல்லது தலைமையை மாற்ற சொல்வார், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்களது கட்சிகளை வளர்த்துக்கொள்ளலாம் என்ற கனவுகளை சுமந்துகொண்டு நடுவீதியில் உற்சாகத்தோடு நின்றனர்.
முன்னாள் செயலாளர் நாயகம் ஹசனலி பேச ஆரம்பித்தவுடன் ஏனைய கட்சிப் போராளிகள் கரவோசத்தை வழங்கினர். கூட்டம் சூடு பிடிக்கும் நேரத்தில் இது தலைவரை மாற்றும் போராட்டம் அல்ல தலைவரை திருத்தும் போராட்டம் என முன்னாள் செயலாளர் நாயகம் ஹசனலி பகிரங்கமாக கூறி முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மீதுவுள்ள வீசுவாசத்தை வெளிக்காட்டியுள்ளார்.
இதனால் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க வந்த ஏனைய கட்சிப் போராளிகள் ஆத்திரமடைந்து இறுதியில் ஹஸனலிக்கு எதிராக கூக்குரல் சத்தமிட்டு அவரை பேசாமல் தடுக்க முயன்று இறுதியில் மூக்குடைந்தனர்.
இது கட்சியை தூய்மைப் படுத்தும் போராட்டம் அல்ல பதவிகளையும், அதிகாரங்களையும் தலைவரிடம் இருந்து பெற்றுக்கொள்ள எடுத்த போராட்டம் என மக்கள் மத்தியில் கேள்வியும், சந்தேகமும் எழுந்தது. உள்வீட்டு பிரச்சினையை நீங்களே தலைவரிடம் பேசி இருக்கலாம் அதற்க்கு ஏன் இந்த அலங்கார மேடை எனவும் கூட்டத்துக்கு வந்தவர்கள் ஆத்திரமடைந்தனர்.
இந்த கூட்டமைப்புக்கு ஆதரவாக பல அரசியல் வாதிகள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் தற்பொழுதும் இயங்குகின்றனர் அவர்களும் இணைந்துதான் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு எதிராக செயற்பட்டனர். அவர்களையும் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தனர். இறுதியில் அவர்கள் இந்தக் கூட்டமைப்புக்கு வரமால் போலி காரணங்களைச் சொல்லி நழுவி கூட்ட ஏற்பாட்டாளர்கள் முகத்தில் கரியை பூசிவிட்டனர். எதிர்காலங்களில் அவர்களின் எதிர்பார்ப்புக்கள் தனது தனிப்பட்ட இலாபம் நிறைவேறாவிட்டால் அவர்களும் மேடை ஏற வாய்ப்புள்ளது.
அன்றைய கூட்டத்தின் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடமிருந்து முன்னாள் செயலாளர் நாயகம் ஹசனலி மற்றும் ஏனையவர்கள் ஏதோ பதவிகளை எதிர்பார்க்கின்றனர் என மக்கள் அந்த கூட்டமைப்பை அறிந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஸபா ரௌஸ் கரீம்,
கல்முனை.