2017ம் ஆண்டின் சட்ட வாரத்தை ( LAW WEEK ) முன்னிட்டு அக்கரைப்பற்று சட்ட உதவி ஆணைக்குழு மற்றும் அம்பாறை மாவட்ட இணையம் ஆகியன இணைந்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் ஏனைய சட்டங்கள் தொடர்பான பயிற்சி செயலமர்வு 04.03.2017ம் திகதியான இன்று அக்கரைப்பற்று சுவாட் அலுவலகத்தின் கேட்போர் கூட மண்டபத்தில் சட்ட உதவி ஆணைக்குழுவின் பொறுப்பாளர் ஜனாப். நசீம் சட்டத்தரணி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தின் போது குடும்ப வன்முறைச்சட்டம், மற்றும் இதர சட்டங்கள் பற்றியும், அக்கரைப்பற்று சட்ட உதவி ஆணைக்குழு பற்றிய அறிமுகம் மற்றும் அன்மையில் இலங்கை அரசினால் அறிமுகம் செய்யப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட்டது. இதனை அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் ஜனாப். எம்.எம்.பஹீஜ் (சட்டத்தரணி) அவர்கள் தெளிவுபடுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன்போது அக்கரைப்பற்று நீதி மன்றப் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு , திருக்கோவில் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த அரசசார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.


