யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த இலங்கை போக்கு வரத்துக்கு சொந்தமான பஸ்ஸில் கேராள கஞ்சா 9 1/2 கிலோ 515 கிரேமுடன் நேற்றிரவு (09) கைது செய்து செய்துள்ளதாக உப்புவௌி பொலிஸார் தெரிவித்தனர்.
உப்புவௌி பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து பஸ்ஸை கன்னியா பகுதியில் வைத்து சோதனையிட்ட போது கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபரொருவரையும் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை.இலிங்கநகர்.முருகன்கோயில் பகுதியைச்சேர்ந்த ஜோன்ஷன் ரொபின்ஷன் (30வயது) எனவும் தெரியவருகின்றது.
குறித்த சந்தேக நபரை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவௌி பொலிஸார் தெரிவித்தனர்.