திருகோணமலை-கண்டி பிரதான வீதி 93ம் கட்டை சந்தியில் இன்று (10) அதிகாலை 3-45 மணியளவில் காரும் கெப் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில்
காரில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் முள்ளிபொத்தானை.இலக்கம் 228 யுனிட் 07யைச்சேர்ந்த ஆசிரியர் அலிகான் நௌபர்கான் (38வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் ஜனாஷா கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்ட்டுள்ளது.
இதேவேளை கெப்வாகனத்தில் பயணித்தவர்களில் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் கன்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன்
விபத்து தொடர்பில் கன்தளாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.