பொத்துவில் தாஜகான்-
பொத்துவில் பிரதேசத்தில் கல்வி கற்கின்ற வறிய மாணவர்களின் கல்வி நலன் மேம்பாட்டு திட்டத்தின் அடிப்படையில் அலன் மதுசிக்கா அசோசியேஷன் பென்தோட்ட நிறுவனம் இன்று (5) பொத்துவில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் முகமாக 10 துவிச்சக்கர வண்டிகளை தெரிவு செய்யப்பட்ட தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்களுக்கு வழங்கி வைத்தது.
பொத்துவில் மதுசிக்கா விளஜ்ஜில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிறுவனத்தின் பணிப்பாளர் அலன், செயலாளர் றினோஸ் முகம்மட் , ஐக்கிய தேசிய கட்சி பொத்துவில் அமைப்பாளர் என்.எம்.கபீர் மற்றும் பாடசாலை அதிபர்; ஆசிரியர்கள் பெற்றோர், நலன் விரும்பிகள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.


