எம்.ரீ.ஹைதர் அலி-
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர் கே.பீ.எஸ். ஹமீட் அவர்களின் வேண்டுகோளுக்கமைவாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் முயற்சியினால் கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ. நஸீர் அஹமட் அவர்களின் பூரண ஒத்துழைப்போடு 2016ஆம் ஆண்டுக்கான மாகாண சபை நிதி ஒதுக்கீட்டிலிருந்து வீதி மற்றும் வடிகான்களை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வுகள் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் செயலாளர் ஜே. சர்வேஸ்வரன் தலைமையில் 2017.03.11 ஆந்திகதி- சனிக்கிழமை நடைபெற்றது.
கிழக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து 10 இலட்சம் ரூபா செலவில் கொங்றீட் வீதியாக புனரமைப்பு செய்யப்பட்ட மீராவோடை பாடசாலை குறுக்கு வீதி அதனுடன் இணைந்ததாக 10 இலட்சம் ரூபா செலவில் வடிகான்,10 இலட்சம் ரூபா செலவில் கொங்றீட் வீதியாக புனரமைப்பு செய்யப்பட்ட காவத்தமுனை ஹிஸ்புல்லாஹ் வீதி மற்றும் 20 இலட்சம் ரூபா செலவில் கொங்றீட் வீதியாக புனரமைப்பு செய்யப்பட்ட அல்-மஜ்மா நகர் என்பன மக்கள் பாவனைக்காக உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களாகும்.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ. நஸீர் அஹமட் அவர்களும். கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக், முதலமைச்சர் மற்றும் உள்ளுராட்சி கிராமிய அபிவிருத்தி, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ. அஸீஸ், அவர்களும் ஏனைய அதிதிகளாக கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர் கே.பீ.எஸ். ஹமீட், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எச்.எம். இஸ்மாயில், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.மீராசாஹிப், எஸ்.ஏ.அன்வர் மற்றும் எம்.எம்.அஹமட்லெப்பை, கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.