எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக், இராணுவ தடுப்பு காவலிலிருந்த இன்று (24) ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 850 பேரை, தனது பாதுகாப்பு படைகளை கொண்டு படுகொலைசெய்த குற்றத்திற்காக, ஹொஸ்னி முபாரக் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட மக்கள் எழுச்சியின் பின்னர் கைதுசெய்யப்பட்டு அந்நாட்டு இராணுவ தடுப்பில் வைக்கப்பட்டார்.
மேலும் 80 வயதாகவும் ஹொஸ்னி முபாரக் சுமார் 30 வருடகாலம் எகிப்தை ஆட்சி செய்துள்ளார். இந்நிலையில் அரபி வசந்த புரட்சியின் மூலம் அவரது ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதோடு, படுகொலைகள் மற்றும் ஊழல் குற்றத்திற்காக ஹொஸ்னி முபாரக் மற்றும் அவரது இரண்டு மகன்மார் என்போர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் மகன்மார் இருவரும் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் விடுவிக்கப்படவே, கய்ரோவிலுள்ள இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முபாரக், நோய்வாய் பட்டநிலையில் கடந்தாண்டு மேன்முறையீடு செய்திருந்தார்.
குறித்த மனுவை விசாரித்துள்ள கெய்ரோ இராணுவ நீதிமன்றம் ஹொஸ்னி முபாரக்கின் உடல்நிலை என்பவற்றை கருத்திற்கொண்டு, அவரை விடுதலை செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.