காட்டால் ஒரு வேட்டு.!

காட்டால் ஒரு வேட்டு
+++++++++++++++++
வருத்தம் போக்குமென்று
வாக்களித்தார் ஆட்சிக்கு.
வருத்தமானி போக்கியது
வாழ்ந்திருந்த உரிமைகளை

கட்டி வெச்சு அடிச்சாலும்
மறிச்சு வெச்சு புடிச்சாலும்
தட்டிக் கேட்க ஆளின்றித்
தவிக்கிறது மறிச்சுக் கட்டி

ஆட்களை விரட்டி விட்டு
அந்த இடத்தைக் பாழ் படுத்தி
பேக்காடு வளர்பதனை
பிற இடத்தில் கண்டதுண்டா?

முசல்மானை விரட்டி விட்டு
முசல் மான் வளர்ப்பதற்கா
முசலியில் முனைகின்றார்
அசல் நோக்கம் என்ன ஐயா?

முக்காடு போட்டவர்கள்
எக்கேடு கெட்டால் என்ன
இக்காடு வளர வேண்டும்
என்று சொல்லும் நியாயம் பாரு., 

பள்ளி இருந்த இடம்
பிள்ளை பிறந்த இடம்
இல்லை என்று ஆக்குவதா
நல்லாட்சி லட்சணங்கள்

சிரிச்சு வாழ்ந்திருந்தார்
சிறு வயதில் அந் நிலத்தில்.
மறிச்சுக் கட்டுவதேன்
மகிழ்ந்திருந்த பூமியினை?

கொள்ளுப் பிட்டியிலே
குளிர் அறை கேட்கவில்லை
கொள்ளுத் தாத்தாவுடன்
கொஞ்சிய இடம் கேட்கின்றார்.

ஐயா தலைவர்களே
அனியாயம் செய்யாதீர்
செய்ய நினைத்தவர்க்கு
நேர்ந்த நிலை நினைத்திடுவீர்.
-நிழூஸ்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -