அபு அலா
நிந்தவூர் தொற்றாநோய் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையில் பொதுமக்களுக்கான இலவச வைத்திய நடமாடும் சேவை நாளை காலை (01) 9.00 மணி தொடக்கம் 12.00 மணிவரை இடம்பெறவுள்ளதாக நிந்தவூர் தொற்றாநோய் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளரும், அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த இலவச வைத்திய நடமாடும் சேவையில் தொற்றாநோய், டெங்கு, நீரிழிவு வைத்திய பரிசோதனைகள் விசேடமாக இடம்பெறவுள்ளதாகவும், இப்பரிசோதனைகள் 200 பேருக்கு மாத்திரமே பார்வையிடப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இச்சேவையை ஆரம்பித்து வைப்பதற்காக சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.