நாவிதன்வெளி பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதேச அபிவிருத்திற்கு குழுத் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம்.மன்சூர் தலைமையில் நேற்று பிரதேச கலாச்சார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ரீ.கலையரசன், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன், திணைக்களங்களின் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மீளாய்வு செய்யப்பட்டதுடன், இந்த ஆண்டுக்கான கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதிகளினால் முன்மொழிவுகளும் ஆராயப்பட்டது.



