ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிழக்கு மாகாணசபையின் மாதாந்த அமர்வுக்கு இன்று முன்னால் முதலமைச்சரும் தற்போதய கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டார்.
இன்று 21ம் திகதி இடம் பெற்ற கிழக்கு மாகாணசபையின் அமர்வு தவிசாளர் சந்திரகாச கலபதி தலைமையில் காலை 9.00 மணிக்கு கூடிய போது இவர் வருகை தந்திருந்தார். முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கபட்டுள்ள இவர் மாகாணசபையின் சில அமர்வுகளுக்கு வந்து கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.