கல்முனை அபிவிருத்தி தொடர்பிலான நட்புறவுக்கலந்துரையாடல்..!

முகம்மது காமில்-
ல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டின் பேரில் கிழக்குமாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆரம்பாகால உறுப்பினரும் கல்முனை நகர ஜும் ஆ பள்ளிவாசலின் தலைவருமான சமூக சேவகருமான அல்ஹாஜ் கே.எம்.ஏ. அப்துர் ரசாக் (ஜவாத்) அவர்களுடனான கல்முனை அபிவிருத்தி தொடர்பிலான நட்புறவுக் கலந்துரையாடல் 18.03.2017 சனிக்கிழமை இரவு 08.30 மணியளவில் கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தில் மிக விமர்சையாக இடம்பெற்றது.

மேற்படி விசேட கலந்துரையாடல் நிகழ்வை கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் சார்பாக அதன் கல்விக் குழுத்தலைவரும் பிரதி அதிபருமான மௌலவி. யு. எல்.எஸ். ஹமீட் அவர்கள் தலைமை தாங்கி நடாத்தினார்கள். இந் நிகழ்வில் அமைப்பின் சார்பாக அதன் பொதுச் செயலாளர் அல்ஹாஜ். எஸ்.எல்.எம். இப்ராஹீம் மற்றும் அமைப்பின் அபிவிருத்திக் குழுத் தலைவரும் வைத்திய கலாநிதியுமான எம்.எச்.ரிஸ்பின், அமைப்பின் சுகாதாரத் துறைத் தலைவரும் வைத்திய கலாநிதியுமான எம்.எம்.ஜெசீலுல் இலாஹி மற்றும் அமைப்பின் சிரேஸ்ட நிருவாக குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் கல்முனை நகரம் அபிவிருத்தியில் பின்னோக்கி இருப்பதற்கான காரணம் அதற்க்கான தடைகள் மற்றும் தடைகளை அகற்றி எதிர்காலத்தில் கல்முனை நகரை அபிவிருத்திப் பாதையில் முன்னேற்றுவதற்கான வழிமுறைகள் தொடர்பிலும், கல்முனையை அபிவிருத்தியில் சிவில் சமூக அமைப்புகளின் பங்களிப்புகள், நலிவடைந்து போய்யுள்ள கல்முனையின் கல்வி அபிவிருத்தி மற்றும் கல்முனை அபிவிருத்தியில் கிழக்கு மாகாண சபையின் பங்களிப்புகள் தொடர்பாகவும் சிறந்த பல கருத்துகளை கௌரவ மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் கே.எம்.ஏ. அப்துர் ரசாக் (ஜவாத்) தனது உரையின் பொழுது தெளிவு படுத்தினார்.

எதிர்காலத்தில் கல்முனை நகர அபிவிருத்தி தொடர்பில் தான் மேற்கொள்ளும் காத்திரமான செயர்த்திட்டங்களுக்கும் அதனை நடைமுறைப்படுத்தும் பொழுதும் சிவில் சமூக அமைப்பான கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் காத்திரமான பங்களிப்பு என்பது மிக அவசியமாகும் என்பதனையும் அவர் வலியுறுத்தினார்.

நிகழ்வின் இறுதியில் கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் எதிர்கால செயர்ப்பாடுகளுக்கு வலு சேர்க்கும் வகையில் கௌரவ கிழக்குமாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் கே.எம்.ஏ.அப்துர் ரசாக் (ஜவாத்) அவர்கள் தனது பன்முகப் படுத்தப்பட்ட நிதியில் இருந்து ரூபா. 300,000.00 பெறுமதியான தொடர்பாடல் உபகரணத் தொகுதியை வழங்கி வைத்தார்கள்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -