திருகோணமலை மாவட்டத்தில் மூன்று பொலிஸ் நிலையங்களில் நான்கு விபத்துக்களில் ஆறு பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் இன்று (03) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட நிலாவெளி.இக்பால் நகர் பகுதியைச்சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் மோட்டார் சைக்கிளில் சென்று போக்குடன் மோதியதில் கால் உடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கன்னியா.06ம் கட்டை பகுதியைச்சேர்ந்த இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாகச்சென்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அதே இடத்தைச்சேர்ந்த 16 வயது மற்றும் 17 வயதுடையவர்கள் காயமடைந்துள்ளதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் துறை முகப்பொலிஸ் பிரிவில் கார் -மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் காயமடைந்துள்ளதுடன் காரின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும் மோட்டார் சைக்கிள் இரண்டும் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு பேர் காயமடைந்த நிலையில் மற்றைய சாரதியான திருகோணமலை.உட்துறைமுக வீதியைச்சேர்ந்த 34 வயதுடைய எஸ்.சஞ்ஜித் குமார் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
