காரைதீவு நிருபர் சகா-
அம்பாறை புதிய வளத்தாப்பிட்டி ஆலயங்களின் மீதுபாடப்பட்ட பக்திப்பாடல் அடங்கிய இறுவெட்டு வெளியீட்டுவிழா இன்று 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப.3.30 மணிக்கு நடைபெறும்.
புதிய வளத்தாப்பிட்டியைச்சேர்ந்த கந்தசாமி விஜயகாந்(விஜி) மற்றும் அவரது துணைவியார் இணைந்து எழுதி மற்றும் சில பாடகர்களுடன் இணைந்துஇசையமைத்துப்பாடிய பாடல்கள் இவ் இறுவெட்டில் பதியப்பட்டுள்ளன.
புதிய வளத்தாப்பிட்டி நாவலர் சனசமுக நிலைய மண்டபத்தில் நடைபெறவிருக்கும் இவ்விழாவிற்க பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான மு.இராஜேஸ்வரன் த.கலையரசன் ஆகியோர் கலந்துகொள்வார்கள்.