10 ஆயிரம் கிலோ தேயிலையுடன் 50அடி பள்ளத்தில் வீழ்ந்த லொறி -படங்கள்






நோட்டன் பிரிட்ஜ்  மு.இராமச்சந்திரன்-

பொகவந்நதலா அட்டன் பிரதான வீதியில் நோர்வூட் பகுதியில் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தியசிரிகம பகுதியில் 09.03.2017 இரவு 9.30 மணியளவில் விபத்து சம்பவித்துள்ளது.

பொகவந்தலாவயிலிருந்து கொழும்பிற்கு 10 ஆயிரம் கிலோகிராம் தேயிலை தூலை ஏற்றிச்சென்ற லொறியை நோர்வூட் பொலிஸார் நோர்வுட் நகரில் சோதனைக்குற்படுத்திய போது அதன் சாரதி மதுபோதையில் இருந்துள்ளார் சாரதியை பொலிஸார் கைது செய்யதவேலையில்.

இந் நிலையில் லொறியின் நடத்துனர் பொலிஸாரின் கட்டளையை மீறி லொறியை அதிகவேகமாக செலுத்திச் சென்ற நிலையிலே 50 பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த நடத்துனர் டிக்கோயா கிளங்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையை நோர்வூட் பொலிஸார் தொடர்கின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -