ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவின் பல பகுதிகளிலும் டெங்கு தீவிர அடைவதைக் கட்டுப்படுத்த கிண்ணியா இளைஞர்கள் களப்பணியில் இறங்கியுள்ளனர். இதன் இன்று (12) ஒரு கட்டமாக கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொது சுகாதார பரிசோதகர்களுடன் சேர்ந்து கிண்ணியாவின் குட்டிக்கராச்சி, எகுத்தார் நகர் பகுதிகளில் டெங்கு குடம்பிகள் லாவாக்களைக் கண்டு பிடித்துள்ளதுடன் சிவப்பு எச்சரிக்கையும் சட்ட நடவடிக்கையாக சிலருக்கு நீதிமன்ற தண்டப்பணம் அறவீட்டு நடவடிக்கைகளும் எடுக்க இருப்பதாக கிண்ணியா பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் தெரிவித்தார்.
டெங்கு களப்பணியில் மேலதிகமாக பரிசோதகர்கள் பற்றாக் குறை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் இருந்து பொதுசுகாதார பரிசோதகர்கள் கடமையில் தற்போது ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் கிண்ணியா பொதுசுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எம்.எம்.அஜீத் தெரிவித்தார்.மேலும் இன்று டெங்கு நோயினால் ஏழு வயது சிறுமியும் 37 வயதுடைய பெண்னொன்றும் உயிரழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.