அஷ்ரப் ஏ சமத்-
பொலிஸ்மா அதிபர் புஜித்த ஜயசுந்தரவினால் பின்வரும் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு உடன் அமுலுக்கும் வரும் வகையில் இடமாற்ங்களை இலங்கை பொலிஸ் ஆனைக்குழுவினால் அனுமதிக்கப்பட்டுள்ளன. இவ் இடமாற்றங்கள் இம்மாதம் 11ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரிதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான கே.எஸ்.வி.ஆர் டயஸ் இரத்தினபுரி-கேகாலையிலிருந்து நுவரெலியாவுக்கும், பி.குணதிலக்க நுவரெலியாவிலிருந்து இரத்தினபுரி- கேகாலைக்கும், எல்.எம்.எப்.ஆர்.ஜே. சில்வா ஜனாதிபதியின் பாதுகாப்பில் இருந்து ஜனாதிபதியின் பாதுகாப்புப்பிரிவுக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும், பதில் பிரதிப் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றும் கே.பி.எம் குணரத்தின ஜனாதிபதியின் பாதுகாப்பு முன்ஏற்பாடு பிரிவுக்கும் இடமாற்றம் பெற்றுள்ளனர்.
சிரேஸ்ட பொலிஸ் அத்தியகட்சர் – எஸ்.ஏ.ஆர்.பி ஜயதிலக்க ஜனாதிபதி பாதுகாப்பிலிருந்து ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவு, ஜே.ஏ.பி.பி.பி. பேரேரா பொலிஸ் தலைமையகத்தின் விசாரனை முறைப்பாடு பிரிவிலிருந்து துன்பங்கள் பற்றிய பிரிவு, ரீ.ஜே.பல்லியக்கார அமைச்சின் பாதுகாப்புப் பிரிவு இருந்து மன்னார் பிரதேசத்திற்கும் இடமாற்றம் செய்யபட்டுள்ளனர்.
பொலிஸ் அத்தியட்சகர்களான – பி.ஆர்.பி. சேனநாயக்க துன்ப்படுவோர் பிரிவிலிருந்து தலைமைக்கரியாலயத்தின் நிருவாகப் பணிப்பளர், ஜே.கே.பி. அபேன்ஸ், அமைச்சின் பாதுகாப்புப் பிரிவிலிருந்து அமைச்சின் பாதுகாப்புப் பணிப்பாளர்
உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் - எல்.எப்.கே.சில்வா கல்கிசையிருந்து மன்னாருக்கும், எம்.ரீ.எஸ்.வை ஜயசேகர மன்னாரிலிருந்து கல்கிசைக்கும், உதவி பொலிஸ் அத்தியட்சகர்களான (மகளிர்) எப்.டபிள்யு முத்துமால பொலிஸ் தலைமையக குற்றத்தடுப்புப் பிரிவு, ரீ.எஸ்.பெரியப்பெரும (மகளிர்) பொலிஸ் தலைமையத்தில் இருந்து உள்ளக பிரிவு எம்.எம்.எல்.அமரசேன சிறுவர் மகளிர் விவகாரம் பிரிவில் இருந்து சிறுவர் மகளிர் பிரிவின் பணிப்பாளராக இடமாற்றப்பட்டுள்ளனர்