ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் எந்தவொரு அமைப்பிற்கும் மத்தியில் அண்மையில் எவ்வித சலசலப்போ, சண்டையோ ஏற்படவில்லை. தவ்ஹீத் ஜமாஅத் எப்போதும் கருத்தை கருத்தால் எதிர் கொள்ளக்கூடியது. அடாவடித் தனத்தால் ஒரு போதும் சத்தியத்தை நிலை நாட்ட முடியாது என்ற நிலைப்பாட்டில் இருக்கக்கூடியவர்கள்.
காத்தாங்குடியில் இரண்டு அமைப்புகளுக்கு மத்தியில் எற்பட்ட பிரச்சினையை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்துடன் முடிச்சுப்போட்டு அவதூறு பரப்புபவர்கள் அறிந்து கொள்ளட்டும்.
"எவன் ஒருவன் தான் கேட்டதை எல்லாம் பரப்பக் கூடியவனாக இருக்கின்றானோ, அவன் பொய்யன் என்பதற்கு போதுமான சான்றாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்" அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரழி).
ஆதாரம்: முஸ்லிம்.
இப்படிக்கு,
A.G ஹிஷாம் MIsc.
பொதுச் செயளாலார்,
ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்.