தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விவசாயிகளுக்கான இலவச பயிற்சிப்பட்டறை.!

சலீம் றமீஸ்-
தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் அவர்களது வழிகாட்டலில் பல்கலைக்கழக தொழிநுட்பவியல் பீடத்தின் ஏற்பாட்டில் 'விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தல்' எனும் தொனியில் இலவசமாக ஒரு நாள் பயிற்சிப் பட்டறை நடாத்தப்படவுள்ளதாக பயிற்சிப் பட்டறையின் இணைப்பாளரும், விரிவுரையாளருமான கலாநிதி ஏ.என்.எம்.முபாறக் தெரிவித்தார்.

இந்தப் பயிற்சிப் பட்டறை ஹேலீஸ் நிறுவனத்தின் அனுசரனையில் முதற்கட்டமாக அட்டாளைச்சேனை, நிந்தவூர் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுலுள்ள விவசாயிகள், விவசாய குழுக்களின் பிரதிநிதிகள் உட்பட அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வரும் விவசாய பணிப்பாளர்கள், விவசாய போதனாசிரியர்கள், விவசாய தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில் நுட்ப உதவியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இப் பயிற்சிப் பட்டறையானது எதிர் வரும் 2017.03.30 ஆம் திகதி ஒலுவில் மகாபொல பயிற்சி நிலையத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழக தொழில் நுட்பவியல் பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதுடன், இப் பயிற்சிப் பட்டறையில் குறிப்பிட்ட தொகையினரே இணைத்துக் கொள்ளப்படவுள்ளதால் இதில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள், விவசாய குழுக்களின் பிரதிநிதிகள், விவசாய உத்தியோகத்தர்கள் தங்களது பெயர்களை முன் கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறும் இணைப்பாளர் கலாநிதி முபாறக் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம், தொழில் நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எம்.ஜீ.முகம்மட் தாரீக் மற்றும் விரிவுரையாளர்கள் உட்பட ஹேலீஸ் நிறுவனத்தின் உயரதிகாரிகள், வளவாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

தொடர்புகளுக்கு : 

கலாநிதி ஏ.என்.எம். முபாறக் 
(விரிவுரையாளர்,தொழில் நுட்பவியல் பீடம்)
பயிற்சி பட்டறைக்கான இணைப்பாளர் - 0710588178

அல்லது

கலாநிதி யூ.எல்.ஏ.மஜீட்
சிரேஷ்ட விரிவுரையாளர், - 0773121350
தொழில் நுட்பவியல் பீடம்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -