க.கிஷாந்தன்-
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை - பூண்டுலோயா பிரதான வீதியில் வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் இருவர் படுங்காயங்களுக்குள்ளாகி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
தலவாக்கலையிலிருந்து வட்டகொடை பகுதிக்கு சென்ற வேன் தலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதியில் ஒலிரூட் பகுதியில் வீதியை விட்டு விலகி மண்மேட்டில் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
03.03.2017 அன்று மாலை இவ் விபத்து நேர்ந்துள்ளதாக தலவாக்கலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். வேனில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
படுங்காயங்களுக்குள்ளாகியவர்களில் ஒருவர் லிந்துலை வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.