இலங்கை கடற்படையினர் இந்திய மீனவரை சுட்டுக் கொலை செய்யவில்லை

இலங்கை கடற்படையினர் இந்திய மீனவரை சுட்டுக் கொலை செய்திருப்பதாக தெரிவிக்கப்படும். இந்திய மத்திய அரசின் குற்றச்சாட்டை கடற்படை பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் சமிந்த வலாக்குழு நேற்று முற்றாக மறுத்தார்.

இந்தியா குற்றம் சுமத்துவதுபோல் இலங்கை கடற்படையினர் எவ்வித சம்பவங்களிலும் ஈடுபடவில்லையென உறுதியளித்துள்ள அவர், கடற்படை மீதான குற்றச்சாட்டு போலியானதென்றும் நிராகரித்தார்.

“எவர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்துமாறு இலங்கை கடற்படைத் தளபதி கடற்படை அதிகாரிகளுக்கு ஒருபோதும் உத்தரவு பிறப்பித்தது இல்லை. இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடிப்போர் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோரை கைது செய்யுமாறு மட்டுமே இதுவரையில் கடற்படையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறினார்.

எமது நாட்டின் கடல் எல்லைக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்களை பல்வேறு சந்தர்ப்பங்களிலும் நாம் கைது செய்துள்ளோம். கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் கரைக்கு அழைத்து வரப்பட்டதும் கடற்படையினரால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவர். பின்னர் சட்ட நடவடிக்கைகள் முடிவடையும் வரை அவர்கள் மீன்பிடித் திணைக்களத்தின் பொறுப்பில் வைக்கப்படும் நடைமுறையே தொடர்ந்தும் கையாளப்பட்டு வருவதாகவும் பேச்சாளர் சுட்டிக் காட்டினார்.

இந்திய மீனவரின் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் இலங்கைக்கு எவ்வித தொடர்பும் இல்லாத நிலையில் நாம் காரணமின்றி இந்தியாவிடம் மன்னிப்பு கேட்க்கத் தேவையில்லை என்றும் அவர் தினகரனிடம் தெரிவித்தார்.

“துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ள மீனவர் மீது சிறியரக வள்ளங்களில் வந்தோரே அருகிலிருந்து துப்பாக்கிச்சூடு நடத்திச் சென்றதாக அவருடன் இருந்த சக இந்திய மீனவர்கள் தெரிவித்துள்ளனர். உண்மையில் இலங்கை கடற்படையிடம் சிறிய ரக வள்ளங்கள் இல்​லை. கச்சதீவுக்கு செல்வதற்காக மட்டுமே அதிவேக சிறிய ரக வள்ளங்களை கடற்படையினர் பாவனைக்காக எடுத்துக்ெகாள்வர்.

இலங்கை கடற்படையிடம் சக்தி வாய்ந்த வேகத் தாக்குதல் வள்ளங்கள் மற்றும் வேகத்தாக்குதல் காவல்ரோந்து வள்ளங்கள் என்பனவே உள்ளன. கடல் எல்லை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் இப்பாரிய வள்ளங்களின் உதவியுடனேயே முன்னெடுக்கப்படும். எனவே இச்சம்பவத்தை இலங்கை கடற்படையினர் முன்னெடுத்திருக்க சந்தர்ப்பமில்லை.” என்றும் அவர் தெரரிவித்தார்.

இலங்கையில் தற்போது 85 இந்திய மீனவர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளதுடன் 146 படகுகள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.

அத்துடன் இலங்கை கடற்படை விடுத்துள்ள அறிக்ைகயில் மார்ச் 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ள கச்சதீவு திருவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கடற்படை முன்னெடுத்து வருகின்றது. கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில் இம்முறை கச்சதீவு திருவிழாவுக்கு 5 ஆயிரம் இந்திய மீனவர்கள் 150 வள்ளங்களுடன் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிலையில் வெளியாகியிருக்கும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை இலங்கை கடற்படை நிராகரிப்பதுடன் உண்மைக்குப் புறம்பான விடயங்களைக் கண்டறிவதற்காக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -