ஏறாவூர் இரட்டைக்கொலை: கிழக்குப் பல்கலைக் கழகத்திலிருந்து வந்த கடிதத்தால் மீண்டும் சோகம்

டந்த வருடம் செப்ரெம்பர் மாதம் மட்டக்களப்பு ஏறாவூரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய தாய், மகள் இரட்டைப் படுகொலைச் சம்பவத்தில் கொல்லப்பட்டவரான ஜெனீராபானு மாஹிர் (வயது 32) என்ற பெண்னுக்கே அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 8ஆம் திகதி இடம்பெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு கூறியே குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது அழைப்புக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டதும் தான் கதறி அழுததாக கணவர் மாஹிர் தெரிவித்துள்ளார்.

ஏறாவூர் நகர பிரதேசத்தில் முகாந்திரம் வீதி முதலாவது குறுக்கு ஒழுங்கையிலுள்ள வீட்டில் வசித்து வந்த தாயான நூர்முஹம்மது உஸைரா (வயது 56) அவரது திருமணமாகிய மகளான ஜெனீராபானு மாஹிர் (வயது 32) ஆகியோர் கடந்த செப்ரெம்பெர் 11ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவத்துடன் சம்பந்தப்பட்டதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 6 பேரும் கடந்த செப்டெம்பர் மாதம் தொடக்கம் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் ஆறு பேரும் ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் பெப்ரவரி 22, ஆம் திகதி ஆஜர் செய்த போது சந்தேக நபர்களை மார்ச் மாதம் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.

இதேவேளை படுகொலைச் சந்தேக நபர்கள் மார்ச் 8 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

குறித்த கொலை வழக்கில் இஸ்மாயில் முஹம்மது பாஹிர், உஸனார் முஹம்மது தில்ஷான் (வயது29), கலீலுர் ரஹ்மான் அஹம்மது றாசிம் (வயது 23), புஹாரி முஹம்மது அஸ்ஹர் (வயது23), இஸ்மாயில் சப்ரின் (வயது 30), அபூபக்கர் முஹம்மது பிலால் (வயது50), ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -