மெல்ல மறையும் அஷ்ரப் நாமம்..!

ப்போதெல்லாம் அஷ்ரப் எனும் முதுசத்தின் முகவரியை கட்சிக் காரர்களாலோ ,போராளித்தொண்டர்களாலோ அடிக்கடி உச்சரித்துக் கேட்க முடிவதில்லை. வெறுமனே தேர்தல் வந்தால் சுவரொட்டிகளிலும், பெனர்களிலும், துண்டுப்பிரசுரங்களிலும் புகைப்படங்களாக வந்து மறைவதனைக் காணக்கிடைக்கும். பின்னர் சுவரொட்டிகளில் உள்ள அஷ்ரபினை ஆடுகளும் மாடுகளும் கடித்துமெல்லும் போது எமது ஈரல்குலை கருகும். தலைவனை ஐந்தறிவு ஜீவன்கள் மெல்வதனைக் கூட சகிக்க முடியா சுமையை எம்முள் செலுத்தி மறைந்தான் தலைவன்.

ஆனால் இன்று ஆறறிவு படைத்த விடலைகள் நாவில் விஷம் தடவி விதப்புரைகள் பரப்ப அந்தக்கட்சியின் தலைவனோ ,கட்சியால் வயிறு வளர்க்கும் அங்கத்தவனோ ,தொண்டனோ தருணத்தில் தக்க பதிலளியாது , மறுத்துரைக்காது இருப்பதானது அவர்கள் அஷ்ரப் மீது வைத்துள்ள பற்றினைப் படம் பிடித்துக்காட்டுகின்றது. வெறுமனே தேர்தல் காலத்தில் வாக்குச் சேகரிக்கும் பொக்கிஸமாகவே தலைவன் பயன்படுத்தப்படுகின்றான். ஆனால் பிரிந்து சென்றோர் அத்தனைபேரும் அஷ்ரபினை அடிக்கடி நினைவு கூர்ந்தே வருகின்றனர்.

இன்று தாருஸலாமில் எங்கோ ஒரு மூலையில் கொழுவிவிடப்பட்ட புகைப்படம் ஒன்றை விடுத்து கட்சியின் எந்த இடத்திலும் அஷ்ரப் இல்லை.அஷ்ரபின் கொள்கை இல்லை. அஷ்ரபின் அபிவிருத்தி இல்லை. அஷ்ரபின் அரவணைப்பு இல்லை. எல்லாவற்றிலும் இருந்து திட்டமிடப்பட்டா அல்லது தெரியாத்தனத்திலா அஷ்ரப் எனும் நாமம் அகற்றப்படுகின்றது என்ற கேள்விக்கு இன்றைய முஸ்லிம்கள் விடைதேட வேண்டும்.

கடந்த வசந்தம் டிவி அதிர்வு நிகழ்சி ஒன்றின் போது அஷ்ரபினால் துரத்திவிடப்பட்ட சேகு இஸ்ஸத்தீன் தூக்கத்தில் இருந்து விழித்தது போன்று தன் ஆழ்மனதில் கிடந்து கரிக்கும் உணர்வலைக்கு உருவம் கொடுத்து பேசிய விடையங்களுக்காக விடையளித்தவர் அஷ்ரபின் இடத்தினை தக்க வைத்துக்கொண்ட தலைவனோ அந்த தலைவன் பின்னால் திரண்ட தொண்டனோவல்ல. மாறாக அஷ்ரபின் பாசறையில் அடியொற்றி வளர்ந்து கொள்கைக்காகப் பிரிந்து வந்த எமது "இரண்டாம் அஷ்ரப் " அதாவுல்லாவே. சேகுவின் இத்தகைய செயற்பாட்டை அங்கீகரிக்கும் வண்ணமாக தலைவர் ஹக்கீம் நடந்து கொள்வது அவரை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்ளும் முயற்சிக்கான அஸ்திவாரமாகவே நோக்க வேண்டும்.

ஆக மொத்தத்தில் மூத்த போராளிகளினாலும், அஷ்ரப் கட்சி ஆரம்பித்தபோது அடியொற்றி இருந்தவர்களாலும் மாத்திரமே அஷ்ரபின் கொள்கைகளையும் அவரின் நாமத்தினையும் தூக்கிச் சுமக்க முடியும் எனும் முடிவுக்கு இலகுவாக வந்து விட முடியும். எனவே தான் இன்றைய இளைஞர்கள் இவ்வாறானவர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் இருந்து அரசியல் தெளிவு பெறவேண்டும். மாறாக அஷ்ரப் நாமத்தினை சந்தர்ப்பவசமாகப் பயன்படுத்துபவர்களிடம் இருந்து எதனையும் எமது அடுத்த சந்ததிகளுக்குக் கடத்திவிட முடியாது.
பீ.எம்.சிபான்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -