தாய்லாந்தில் நடைபெற்ற சர்வேதேச மாஸ்டர்ஸ் மெய்வல்லுனர் போட்டியில் கலந்துகொண்டு ஈட்டி ஏறிதலில் தங்க பதக்கமும் , குண்டு போடுதலில் வெள்ளி பதக்கமும் பெற்று எமது நாட்டுக்கும் கிழக்கு மாகாணத்தின் நிந்தவூர் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்த நிந்தவூரை சேர்ந்த யூ.எல்.சியாட் முஹம்மட் அவர்களை சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் அவர்கள் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வரவேற்றார்.
சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் அவர்கள் இவ் விளையாட்டு வீரருக்கு வாழ்த்துக்களை கூறிக்கொள்வதுடன் , இவ் விளையாட்டு போட்டியில் பங்கு கொண்டு மேலும் பல பதக்கங்களை பெற்றுக்கொண்ட வீரர்களுக்கும் வாழ்த்துக்களை கூறிக்கொள்கின்றார்.