எம்.எம்.ஜபீர்-
அதிதிறன் உயர் கல்விக்கான சர்வதேச ஆங்கில மொழி பரீட்சை முறை பயிற்சி நிலையம் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பழைய சந்தை வீதியிலுள்ள அலி வன்னியார் வளாகத்தில் நேற்று (23) திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்தின் பிரதான நிலையமாகவுள்ள அதிதிறன் உயர் கல்விக்கான சர்வதேச ஆங்கில மொழி பரீட்சை முறை பயிற்சி நிலையம் அதன் பிரதம ஆலோசகர் எம்.ஏ.பாறூக் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிறுவனம் உயர்தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களில் இலங்கை பல்கலைக்கழகம் செல்ல முடியாத மாணவர்கள் அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, மலேசியா போன்ற நாடுகளுக்கு சென்று குறைந்த கட்டணத்தில் கல்வி கற்பதற்காக வாய்ப்பினை எட்லொக்கேட் நிறுவனத்தின் ஊடாக பெற்றுக் கொள்ளவுள்ளது.
இதன் மூலம் பிந்தங்கிய பிரதேசத்தில் வாழும் மாணவர்கள் அதிதிறன் உயர் கல்விக்கான வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வில் எட்லொக்கேட் நிறுவனத்தின் பொது முகாமையாளர் திருமதி ஸ்ரீமலி பெர்ணான்டோ, லொக்கேட் நிறுவனத்தின் சிரேஷ்ட ஆலோசகர் இரோமி இராஜரட்ணம், சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளாகளான ஏ.எம்.எம்.நௌஷாட், ஐ.எம்.இப்றாகீம், கல்விமான்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளி;ட்ட பலர் கலந்து கொண்டனர்.