கடலில் இறங்கி இளைஞர்கள் திடீர் போராட்டம்

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாகவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகவும் சென்னை மெரினா கடலில் இறங்கி இளைஞர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விவசாயிகளின் தற்கொலையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், உடனடியாக வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்களை நோக்கி போலீசார் வருவதை கண்ட இளைஞர்கள், உடனே கடலில் இறங்கி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

பின்னர் கடும் போராட்டத்துக்கு பின் கடலில் இறங்கி போராட்டம் நடத்திய இளைஞர்களை மீட்டு, காவல்துறையினர் கைது செய்தனர். விவசாயிகளுக்கு ஆதரவாக கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட தங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என கைது செய்யப்பட்ட இளைஞர்கள் தெரிவித்தனர்.news7
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -