அகமட் எஸ்.முகைடீன்-
அதாவுல்லா அமைச்சுப் பதவி ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக சந்திரிக்காவின் ஆட்சியைக்கவிழ்த்துவிட்டு 2001ம் ஆண்டு பிரதமர் ரணில் தலைமையிலிருந்த அரசில் அமைச்சரை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்ளும் போது மறைந்த தலைவர் அஷ்ரஃப்சொன்ன ஒசியத்து நினைவில்லையா? அல்லது பதவியேற்கும் போது அதாவுல்லா கோமாநிலையில் இருந்தாரா? என்பதை கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சட்டத்தரணி பஹீஜ்அறியாமல் அறிக்கை விட்டிருப்பது 'கண்ணாடி அறையிலிருந்து கல் எரிவது போல் உள்ளது'உங்களின் அறிக்கை என கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் ஏ.ஏ.பசீர்கிண்டல் அடித்துள்ளார்.
பிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கத்தில் கரையோர மாவட்டம் உருவாக்குவதற்கு அனுமதி கிடைத்த போதும் அதன் காரியாலயத்தினை தனது மண்ணில் நிறுவவேண்டும் எனஅடம்பிடித்ததன் விளைவாக கரையோர மாவட்டம் அதாவுல்லாவின் பிரதேசவாதகொள்கையால் அத்தருணத்தில் தடைப்பட்டது. மறைந்த தலைவர் அஷ்ரஃப்பின் கரையோரமாவட்ட கோரிக்கையினை அதாவுல்லா தனது பிரதேசவாதத்தினால் நிராகரித்துவிட்டு இன்று தலைவர் அஷ்ரஃப்பின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றுபவன் என அவரின்கைக்கூலிகள் வுரூடா விடுகின்றனர்.
மறைந்த தலைவர் அஷ்ரஃப் புனர்வாழ்வு அமைச்சின் நிதியில் பொத்துவில் பிரதேசத்தில்நிர்மாணித்த அஷ்ரஃப் கலாச்சார மண்டபத்தினை அவரின் மறைவின் பின்னர் அம்மண்டபத்தில்முடிவுறா வேலைகளுக்கு அதாவுல்லா சொற்ப நிதியினை கொடுத்துவிட்ட அம்மண்டபத்திற்கு அஷ்ரஃப் ஞாபகார்த்த அதாவுல்லா கலாச்சார மண்டபம் என பெயர் சூட்டி திறக்க முற்பட்டபோது பொத்துவில் மக்கள் திரண்டு வந்து மண்டபத்திற்கான பெயர் பலகையினை கோடாறியினால்கொத்தி அகற்றியதை அதாவுல்லா மறந்திருக்கலாம் ஆனால் மக்கள் மறக்கவில்லை. இதனை மறைத்துவிட்டு சட்டத்தரணி பஹீஜ் அறிக்கைவிட்டிருப்பதானது முழுப் பூசனிக்காயையும்சோற்றில் மறைப்பது போன்றுள்ளது.
உள்ளுராட்சி அமைச்சராகவிருந்த அதாவுல்லா, சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையானஉள்ளுராட்சி மன்றத்தினை பெற்றுத்தருவாக கூறி மு.காவின் முக்கிய உறுப்பினர்களை அவரின்கட்சியில் இணைத்து விட்டு பின்னர் உள்ளுராட்சி சபையினை வழங்காமல் சாய்ந்தமருது மக்களையும் உள்ளுர் அரசியல் தலைவர்களையும் ஏமாற்றிய கனவான். இவரா சமூகத்தின்தேவைக்காக ஒன்றினையக் கூடியவர். சரிந்து கிடக்கும் இவரின் அரசியல் செல்வாக்கினை மீட்டெடுப்பதற்கு மக்கள் மத்தியில் இவர் போடும் பெரும் நாடகமாகும்.
முஸ்லிம்களின் உரிமை, பாதுகாப்பு விடயங்களில் மு.கா காத்திரமான பங்களிப்பினை செய்துவருகின்றது. இதன் பின்னால் முஸ்லிம் சமூகம் நிற்கவேண்டுமே தவிர அதாவுல்லா போன்ற உதிரிக் கட்சிகளின் தலைமைகளின் பின்னாலோ அல்லது அவர் விடுத்த அழைப்பையோ எம்சமூகம் கணக்கெடுக்கத் தேவையில்லை என்றார்.