காணியை சுவீகரித்துள்ளார் என கூறுவது உண்மைக்கு புறம்பானது - றஹீம் மௌலவி

பழுலுல்லாஹ் பர்ஹான்-
தான் பணம் கொடுத்து வாங்கிய காணியை சுவீகரித்துள்ளார் என கூறுவது உண்மைக்கு புறம்பானது எனவும் கர்பலா காணி விவகாரத்தை சட்ட ரீதியாக பொலிஸ் மற்றும் நீதிமன்றங்களில் கையாளுவதற்கு தான் எந்த நேரமும் தயாராக இருப்பதாக றஹீம் மௌலவி தெரிவித்தார். கர்பலா காணி விவகாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ் விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் .......

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கர்பலா கிராமத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த சுமார் 312 நபர்களின் 13 ஏக்கர் காணியை றஹீம் மௌலவி ஆகிய நான் சுவீகரித்துள்ளதாக ஊடகங்களுக்கு கர்பலா காணி உரிமையாளர்கள் என்ற போர்வையில் கருத்து தெரிவித்த விடயமானது அந்த காணியின் உண்iமான உரிமையாளரான என் மீது மிக அபாண்டமான பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி இருக்கின்றார்கள்.

உண்மையான விடயம் என்னெவெனில் தான் இக் காணியை மிஹ்ழார் ,பாயிஸ்,அலியார் செய்னம்பு போன்றவர்களிடமிருந்து கொள்முதல் செய்துள்ளேன். நீண்ட வரலாற்றை கொண்ட இக் காணியை காணியின் முன்னாள் உரிமையாளர்கள் நீதி மன்றம் சென்று வழக்கை வென்ற பிற்பாடுதான் குறித்த காணியை கொள்முதல் செய்தேன். ஏன் இவர்கள் இப்போது என் மீது இப்படியான பொய்யான குற்றச்சாட்டை செய்கின்றார்கள் என்பதற்கான காரணம் எனக்கு தெரியவில்லை.

இந்தக் காணியின் முன்னாள் உரிமையாளர்களான பாயிஸ்,நவாஸ்,அலியார் செய்னம்பு ஆகியோரிடம் இருக்கும் போது கர்பலா காணி உரிமையாளர்கள் என்று கூறுபவர்கள் ஆர்ப்பாட்டம் செய்து,பொலிஸில் முறைப்பாடு செய்து காணி பெற்று இருக்கலாம் தானே. காணிக்கு நான் பணம் கொடுத்து,அவர்களுடைய ஆவணங்களை சரிபார்த்து வாங்கிய பிறகு ஏன் பிரச்சினைப்பட வேண்டும்.

இதற்கு பின்னால் ஏதோ ஒரு சதி இருக்கின்றது என்பதை என்னால் உனர முடிகின்றது. நான் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளராக இருந்தாலும் இந்த காணி விடயத்திற்கும் அவருக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. ஆகையால் என்னோடு பிரச்சினை என்றால் என்னோடு சட்ட ரீதியாக பேசாமல் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வை விமர்சித்து இதை அரசியல் பிரச்சினையாக மாற்ற வேண்டாம்.

ஒரு சிலர் இக் காணிப் பிரச்சினையை அரசியலாக்குவதற்கு முனைகின்றனர்.

இறுதியாக நாங்கள் கர்பலா காணி உரிமையாளர்கள் என்று கூறுபவர்களிடம் நான் தெரிவிப்பது என்னெவெனில் உங்களுடைய காணி ஆவணங்கள் உண்மையாக இருந்தால் நீதி மன்றம் சென்று இதற்கு தீர்வை பெறவும் என் மீது வழக்குத் தொடரவும் முடியும். அத்தோடு குறித்த காணிப் பிரச்சினைக்கு நீதி மன்றத்தில் எந்த நேரமும் முகம் கொடுக்க தான் ஆயத்தமாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -